Categories
தேசிய செய்திகள்

இங்கிருந்துதான் கொரோனா இந்தியாவிற்கு வந்துள்ளது – ஆய்வில் வெளியான தகவல்

இந்தியாவில் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா எங்கிருந்து வந்தது என்பது குறித்து பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு தெரிவித்துள்ளது 

இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று எங்கிருந்து பரவ தொடங்கியது என்பது குறித்து பெங்களூரில் இருக்கும் இந்திய அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான மைனக் மொண்டல், சோமசுந்தரம், அங்கிதா ஆகியோர் அடங்கிய குழு ஆராய்ச்சியை மேற்கொண்டது. அவர்களது இந்த ஆய்வில் 294 இந்திய கொரோனா வைரஸின் மரபணு வரிசைப்படுத்தப்பட்டு ஆராயப்பட்டது. உலக அளவில் நிகழ்ந்துகொண்டிருக்கும் விகாரங்களுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் பரவிக் கொண்டிருக்கும் கொரோனாவின் மரபணு வரிசை வேறுபாட்டை தீர்மானம் செய்வதுதான் இவர்களது ஆய்வின் நோக்கமாக இருந்தது.

ஆய்வின் முடிவில் இந்தியாவின் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா, ஓசியானியா என அழைக்கப்படுகின்ற பசுபிக் பெருங்கடல் தீவு நாடுகள் மற்றும் தெற்காசிய பிராந்தியங்களில் இருந்து இந்தியாவிற்கு வந்திருக்கலாம் என்ற தகவல் தெரியவந்துள்ளது. இந்த நாடுகளே அதிகளவில் பயணம் மேற்கொண்ட நாடுகள் என ஆய்வுக் குழுவில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் அதிகமாக 50% ஜி 6.7% ஐ உயிரின கிளைகளால் செறிவூட்டப்பட்டவையாகும்.

அவற்றின் மரபணுக்களை வரிசைப்படுத்தியதில் 40% மாதிரிகள் வேறுபாடுகளை கொண்டுள்ளது என தெரியவந்துள்ளது. தொற்றை பொருத்தவரை உலகம் முழுவதிலும் 71 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்தியாவில் 2.66 லட்சம் பேருக்குதான் இத்தொற்று பரவியுள்ளது. இந்தியாவில் குறைந்த அளவு பரவுவதற்கான காரணம் தனிமனித இடைவெளியை பின்பற்றுவதும், ஊரடங்கு அமலில் இருப்பதும், தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை உட்படுத்துவதும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதும், தொற்றின் மாறுபாடுகளும் தான் முக்கியக் காரணம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்

Categories

Tech |