இன்று முதல் 81 குழுக்கள் மூலமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பரிசோதனை செய்யும் முயற்சியை சுகாதாரதுறை அமைச்சர் விஜய பாஸ்கர் அறிமுகபடுத்தியுள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட சிகப்பு மண்டலங்களில் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. எனவே இப்பகுதிகளில் பரிசோதனையை அதிகப்படுத்தி நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து கொரோனாவை குறைப்பதற்கான முயற்சியில் தமிழக அரசும், சுகாதாரத் துறையும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் 81 குழுக்கள் பரிசோதனையில் தினமும் ஈடுபட உள்ளது. இதன்படி, பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளார்கள். இந்த நடமாடும் குழுக்கள் ஆம்புலன்ஸ் மூலமாகவும் அல்லது ஆங்காங்கே தெருக்களில் பந்தல் அமைத்தும் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த உள்ளனர். சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்களை மெயினாக கண்டறிந்து அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நடமாடும் குழுவை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைத்தார்.