கொரோனா பாதிக்கப்பட்ட நபருடன் உணவகத்தில் அமர்ந்து சாப்பிட்ட 3 குடும்பத்தை சேர்ந்த 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது
சீனாவின் தொடங்கிய கொரோனா தொற்று ஆரம்பத்தில் அதிவேகமாக பரவி பல உயிர்களை எடுத்திருந்தாலும் பின்னர் கடினமான கட்டுப்பாடுகளினால் தொற்றை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தற்போது மீண்டும் சீனாவில் கொரோனா பரவ தொடங்கியுள்ளது. இந்நிலையில் சீனாவின் குவாங்சோவில் இருக்கும் உணவகத்தில் ஒரு குடும்பம் உணவருந்திக் கொண்டு இருந்தது அவர்கள் சீனாவின் வூஹான் நகரத்தை சேர்ந்தவர்கள். அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அவரை அறியாமல் கொரோனா தொற்று இருந்துள்ளது.
அவர்களுடன் பல குடும்பங்கள் உணவகத்தில் அமர்ந்து உணவருந்தியுள்ளனர். சில தினங்களுக்கு பிறகு பாதிக்க்கப்பட்டவருடன் அமர்ந்து உணவு அருந்திய 3 குடும்பங்களை சேர்ந்த 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த தொற்று பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து ஏர் கண்டிஷனர் குழாய் மூலம் அதே உணவகத்தில் இருந்த 3 குடும்பங்களை தாக்கியுள்ளது. சீன ஆராய்ச்சியாளர்கள் வைரஸை சுமக்கும் நீர்த்துளிகள் உணவகத்தில் இருந்த ஏர் கண்டிஷனிங் யூனிட் மூலமாக பரவியதாக தெரிவித்துள்ளனர். ஏர் கண்டிஷனிங் மூலம் கொரோனா பரவுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.