முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்காக நடைபெற்ற நீட் தேர்வில் 9 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்ற நிலையில், தமிழகத்தில் 67 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதனை அடுத்து அகில இந்திய மாணவர்கள் சேர்க்கைக்கான ஒதுக்கீடு மற்றும் மாநில அளவிலான மாணவர்கள் சேர்க்கைக்கான ஒதுக்கீடு நடவடிக்கைகள் நடைபெற்றது.
இந்நிலையில் மருத்துவ படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்ற நிலையில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நடைபெறும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி நவம்பர் 15-ம் தேதி முதல் முதலாம் ஆண்டு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தமிழகத்தில் தொடங்கப்படும். மேலும் இது தொடர்பான அறிவிப்பை மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு வெளியிட்டுள்ளார்.