Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வேற வேற மாநிலத்திலிருந்து…… வெரைட்டி சரக்குகள்…… குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது…!!

திருவண்ணாமலை அருகே மதுபாட்டில்களை கடத்தி விற்பனை செய்து வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துனர்.

திருவண்ணாமலை மாவட்டம் பெருங்கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுன் என்பவரும், கீழ்பெண்ணத்தூர் பகுதியில் வசித்து வரும் ராமசாமி என்கின்ற நபரும் இணைந்து புதுச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து மதுபானங்களை குறைந்த விலையில் வாங்கி கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து தனியம்பாடி காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட,

 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தண்டராம்பட்டு பகுதி அருகே மதுபாட்டில்களை விற்க முயன்ற போது அர்ஜுன் மற்றும் அவரது கூட்டாளி ராமசாமி காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். பின் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது இதில் விஜய் என்பவருக்கும் தொடர்பு உண்டு என்பது தெரியவந்ததையடுத்து, அவரும் கைது செய்யப்பட்டார்.

பின் 3 பேரும்  வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து மேற்கொண்ட விசாரணையில் மூவரும் தொடர்ந்து பல ஆண்டுகளாக பல முறை கண்டித்த பின்பும் குற்ற செயல்களில் ஈடுபட்டது தெரியவர, மூவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கானது பரிந்துரைக்கப்பட்டது.

இதனை விசாரித்த மாவட்ட ஆட்சியர் மூவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். இந்நிலையில் இதற்கான நகல் வேலூர் மத்திய சிறையில் இருக்கும் மூவருக்கும் தனித்தனியாக அனுப்பி வைக்கப்பட்டது.

Categories

Tech |