Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

“மேஷம் முதல் மீனம் வரை” இன்றைய ராசி பலன்கள்…!!

நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம் , ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம்.

மேஷம் :

யோகங்கள் ஏற்பட சிந்தித்து செயல்பட கூடிய  நாள். பிறருக்கு கருத்து சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. வரவைக் காட்டிலும் செலவு கூடும் என்பதால் சிக்கனம் தேவை . தொழிலில் பங்குதாரர்களால் தொல்லை அதிகரிக்கும் எனவே கவனமுடன் செயல்படுங்கள் .

ரிஷபம் :

பழைய நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி , வெளியூர் பயணங்களால் வெற்றி கிடைக்கும் நாள். புதிய பொறுப்புகளும், பதவிகளும் உங்களை தேடி வரும்.  உறவினர்கள் உதவிக்கரம் நீட்ட வாய்ப்புள்ளது. நீண்ட நாள் நாளைய எண்ணம் நிறைவேறி மகிழ்ச்சியடைவீர்.

மிதுனம் :

ஒற்றுமை வலுப்பெறும் நாள். குல தெய்வத்தின் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். கூட்டுத் தொழிலில் நீடித்த குழப்பங்கள் நீங்கும். மனஉறுதியுடனும் பணியாற்றுவீர். பழைய கடன்களைக் கொடுத்து மகிழும் வாய்ப்பு கிடைக்கும்.

கடகம் : 

நல்ல செய்திகள் வந்து சேரும் நாள். நீண்டநாளாக இருந்து வந்த பிரச்சினையொன்று நல்ல முடிவிற்கு வரும்.  குடும்பத்தினர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். பயணங்களினால் பலன் கிடைத்து உங்களின் வரவில் திருப்தி பெறுவீர்கள்.

சிம்மம் : 

வாகன அதிஷ்டத்தால் வளம் காணும் நாள். பெற்றோர்களின் முழுமையாக ஒத்துழைப்பு உண்டு. மாற்றுக் கருத்து தெரிவித்தவர்கள் மனம் மாறுவார்கள். பொருளாதார நிலை ஏற்றம் காணும். அம்மா வழியில் வரவானது  வந்து சேரும்.

கன்னி : 

குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும் நாள். உங்களிடம் இருந்த கொள்கைப் பிடிப்பைத் தளர்த்திக் கொள்வீர்கள். பாதியில் நின்ற பணிகள் மீண்டும் தொடரும்.  நடைபெறும் பஞ்சாயத்துக்கள்  உங்களுக்கு சாதகமாகும். உடல்நலம் சீராகி நிலுவையியல் உள்ள வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

துலாம் :

எதிர்காலம் இனிமையாக அமைவதற்கு திட்டங்கள் தீட்டக்கூடிய நாள் . எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். தீயவர்கள் உங்களை விட்டு விலகுவார்கள்.  பொதுநலன் சார்ந்த  செயல்பட்டால் புகழ் பெறுவீர்கள்.

விருச்சிகம் : 

காத்திருந்த வெற்றிக்கனியை எட்டிப் பறிக்கும் நாள்.  திடீர் திடீர் பயணங்களால் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும்.  கடவுள் வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். விலை உயர்ந்த செல்வங்களை , பொருட்களை வாங்க வாய்ப்புள்ளது.

தனுசு : 

வருமானத்தை பெருககும் வழி கிடைக்கும் நாள்.  தொழிலில் நீங்கள் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். எந்த முக்கிய முடிவையும் சிந்தித்து எடுப்பது சிறந்தது. அத்தியாவசிய தேவை பொருட்களை வாங்கும் சூழல் உருவாகும்.

மகரம் : 

உத்தியோகத்தில் பதவி உயர்வு கிட்டும் சிறந்த நாள். உற்சாகத்தோடு பணியாற்றுவீர்கள். தந்தி மூலமாக வந்த செய்தி உங்களின் நெஞ்சை மகிழ்விக்கும். வரவேண்டிய பாக்கிகள் உங்களிடம் வந்து சேரும். வெளிநாட்டுத் தொடர்பில் பலன் கிடைக்கும். தாயின் உடல்நலத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

கும்பம் : 

தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தடைப்பட்ட சில ஒப்பந்தங்கள் தானாக உங்களிடம் வந்து சேரும். அரசியல்வாதிகளால் பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியம் சீராகும். வீடுகட்டும் பணிக்கு முயன்றுடுவீர்.

மீனம் : 

தடங்கல்கள் விலகி முன்னேற்றம் ஏற்படும் நாள். நல்ல நண்பர்கள் தகவலைக் கொண்டு வந்து உங்களிடம் ஒப்படைப்பார்கள் . மாலை நேரத்தில் சந்தோஷமான செய்தி வந்து சேரும். வருமானத்தில் திருப்தி கிடைக்கும்.

Categories

Tech |