மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று நண்பரின் உதவி மனதில் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். உபரி பண வருமானம் இன்று கிடைக்கும். மனைவி விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று விருந்து விழாவில் கலந்து கொள்ளக் கூடிய சூழலும் இருக்கும். அதே போல மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது படும். ஆதரவு பெருகும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் விலகிச்செல்லும்.
உங்களது செயல்களுக்கு தடை ஏற்படுத்தியவர்கள் தாமதமாகவே விடுவார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். சாதக பாதகங்களைப் பற்றி கவலைப்படாமல் எந்த காரியத்தை நீங்கள் இன்று துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகி செல்லும் கணவன் மனைவியைப் பொறுத்தவரையில் அன்பு நீடிக்கும். இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் எந்தவித தடையும் இல்லை.
ஏற்றத்தை அடையக்கூடும். கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தி கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்
ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று சொந்த நலனில் கவனம் கொள்வீர்கள். தொழிலில் திட்டமிட்ட வளர்ச்சி பெற கால அவகாசம் தேவைப்படும். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுக்கு பயன்படும். புத்திரரின் திறமைமிக்க செயல் மனதை மகிழ்விக்கும். இன்று இழுபறியாக இருந்த சில காரியங்கள் நன்றாக நடந்து முடியும். கையிருப்பு கூடும். மாணவர்களுக்கு போட்டிகள் குறையும். எதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.
இன்று கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். மனம் சந்தோஷமாக இருக்கும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். வெளியூர் பயணம் சிறப்பாக தருணத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் சிறப்பாக இருக்கும். உங்களுடைய நிதி மேலாண்மை இன்று உயரும். வெளியூரில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். இன்றைய நாள் பொன்னான நாளாக இருக்கும் முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள், மனம் மேலும் அமைதியாக காணப்படும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்
மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று புதிய விஷயங்களை அறிவதில் ஆர்வம் கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற தேவையான மாற்றங்களைச் செய்வீர்கள். பணபரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். இன்று எதிலும் இழுபறியான நிலை இருக்கும். இருந்தாலும் சரியான நேரத்திற்கு உங்களுக்கு கை கொடுப்பதாய் சில காரியங்கள் நடக்கும். அடுத்தவர்களால் தொல்லைகள் உண்டாகலாம் பார்த்துக்கொள்ளுங்கள்.
கவனமாக இருங்கள், வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் திருப்பங்கள் ஏற்படும் கோபம் கொஞ்சம் தலைதூக்கும் கூடுமானவரை இன்று பொறுமையாக செயல்படுங்கள். பிள்ளைகளை அனுசரித்து செல்வது ரொம்ப நல்லது. அதேபோல யாரிடமும் எந்தவித வாக்குவாதங்களும் செய்யாமல் நடந்து கொள்ளுங்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் ஓரளவு தான் வெற்றி பெற முடியும்.
கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள் .பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாத்தை காக்கைக்கு அன்னமிட்டால் காரியங்கள் அனைத்துமே உங்களுக்கு நல்லபடியாக அமையும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று சூழ்நிலையை கவனத்தில் கொண்டு செயல்படுவது நல்லது. தொழிலில் அதிக உழைப்பால் உற்பத்தி விற்பனை சீராக தான் இருக்கும். சத்தான உணவுகளை உண்பதால் ஆரோக்கியமாக பலமாக காணப்படும். பெண்கள் தாய்வீட்டு உதவியை கேட்டு பெறுவார்கள். இன்று பணவரவு எதிர்பார்த்ததை விட கொஞ்சம் குறைய கூடும். கடன் விஷயங்களில் தள்ளிப்போடுவது ரொம்ப நல்லது. புதிய நபர்களுக்கு பொருட்களை சப்ளை செய்யும் போது கொஞ்சம் கவனமாக செய்யுங்கள். கோபத்தை கட்டுப் படுத்துவதன் மூலம் காரியங்களை சாதகமாக செய்து முடிக்க முடியும்.
எதிர்பார்த்த தகவல் கொஞ்சம் தாமதப்படலாம். கூடுமானவரை இன்று நிதானத்தை மேற்கொள்ளுங்கள். முடிந்தால் சென்று வாருங்கள் மனம் அமைதியாக காணப்படும். இன்று குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே மட்டும் சிறியதாக வாக்குவாதம் வரக்கூடும். பொறுமையை கடைபிடியுங்கள். எதுவுமே பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். இன்று மாணவ கண்மணிகள் உழையுங்கள். கொஞ்சம் உழைத்து பாடங்களைப் படியுங்கள். ஆசிரியர்களின் சொல்படி நடந்து கொள்ளுங்கள். படித்த பாடத்தை எழுதிப்பாருங்கள்.
ரொம்ப சிறப்பாக காணப்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது காவி நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். காவி நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இல்லையேல் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு சிறப்பை கொடுப்பதாக இருக்கும். அதுபோலவே இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதம் கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் காவி நிறம்
சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று அன்பு வழியை நீங்கள் அதிகமாக பயன்படுத்துவீர்கள். புதிய விஷயங்களை அறிவதில் ஆர்வம் கொள்வீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை செழித்து வளரும். தாராள அளவில் பணவரவு கிடைக்கும்.ப ண கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். ஓய்வு நேரத்தில் இசை பாடலை ரசித்து மகிழ்வீர்கள். இன்று உறவினர் வருகை இருக்கும். வெளிநாட்டில் இருப்பவர்கள் உள் நாட்டிற்கு திரும்புவதற்கு ஏற்ற சூழ்நிலை அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் டென்ஷனும் வீண் அலைச்சலும் இருக்கும். வீண் பகை கூட கொஞ்சம் உண்டாகலாம். எப்பொழுதுமே கவனமாக செயல்படுவது நல்லது.
தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதம் ஏற்படும். வீண் வாக்குவாதங்கள் யாரிடமும் வேண்டாம். பழைய பாக்கிகளை வசூல் செய்யும் பொழுது நீங்கள் நிதானத்தை கடைபிடிப்பது ரொம்ப நல்லது. என்று குடும்பத்தை பொறுத்த வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. சிறப்பாகவே இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். இன்று பிள்ளைகளால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கல்வியில் அவர்கள் சாதிப்பார்கள். மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கல்வியில் இருக்கும். படித்த பாடத்தை மட்டும் எழுதிப் பாருங்கள்.
ரொம்ப சிறப்பாக காணப்படும். அதே போல சக கணவரிடம் நடந்து கொள்ளும் பொழுது ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள். அவர்களிடம் எந்தவித வாக்குவாதமும் செய்யாதீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடியதாக இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதம் கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்
கன்னி ராசி அன்பர்களே..!! இன்று நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் அனைத்தும் சிறப்பாக இருக்கும். அனைவரையும் கவரும் விதமாக இன்று நீங்கள் பேசுவீர்கள். தொழில் வியாபாரம் மிகவும் சிறப்பாக நடக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். மனைவி மூலம் உங்களுக்கு அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளும் இன்று கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களையும் வாங்க கூடும். இன்று பணவரவு எதிர்பார்த்ததை விட சிறப்பாகவே இருக்கும் நீங்கள் நினைத்தது சிறப்பாகவே நடந்தேறும். மற்றவரிடம் பேசும்போது மட்டும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும்.
உங்கள் கருத்துக்களை கூறும் பொழுது அவர்கள் கொஞ்சம் கடுமையாக விமர்சனம் செய்யக் கூடும். ஆகையால் இந்த விஷயத்தில் நீங்கள் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள். திடீரென்று சின்ன விஷயத்திற்காக நீங்கள் கோபப்பட நேரிடும் பார்த்துக்கொள்ளுங்கள். கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் காரியங்கள் சாதகமாக முடியும். அதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. இன்று மாணவர்கள் கல்வியில் கொஞ்சம் கடுமையாக உழையுங்கள். உழைத்து பாடங்களை படியுங்கள். கல்வியில் மட்டும் ஆர்வத்தை செலுத்துங்கள்.
இன்று விளையாட்டிலும் ஆர்வம் செல்லும். கூடுமானவரை கொஞ்சம் பொறுமையாக இருந்து பாடங்களைப் படியுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களுடைய திறமையை பயன்படுத்தி ஓரளவு நன்மை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் உருவாகிற இடையூறுகளை தாமதமின்றி சரிசெய்யவேண்டும். அளவான பணவரவு இருக்கும். மின்சார உபகரணங்களை கவனமாக பயன்படுத்துங்கள். இன்று நீங்கள் வேலை செய்யக்கூடிய இடத்தில் ஆயுதம் நெருப்பை பயன்படுத்தும் போது ரொம்ப கவனமாக பயன்படுத்துங்கள். இன்று கலைஞர்களுக்கு தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளை பெறக்கூடும்.
புகழ் பாராட்டு வந்து சேரும். நல்ல பெயர் எடுப்பதற்காக சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பாராத உதவிகளும் வந்து சேரும். அரசியலில் உள்ளவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைத்தாலும், அதே நேரத்தில் விழிப்புடன் செய்வது நன்மையை கொடுக்கும். இன்று கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். இன்று மாணவர்கள் மட்டும் கல்விக்காக கொஞ்சம் கடுமையாக உழையுங்கள். படித்த பாடத்தை எழுதிப் பாருங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று வழக்கத்திற்கு மாறான பணி உங்களுக்கு தொந்தரவை கொடுக்கும். மனதை செம்மை படுத்திக் கொள்வது அவசியம். தொழில் வியாபாரம் அதிகரிக்க நண்பரின் உதவி கிடைக்கும். பணவரவை சிக்கனமாக செலவு செய்வீர்கள். இன்று நண்பர்கள் உதவியால் எதிர்பார்த்திருந்த காரியங்கள் நல்ல முறையில் முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் கொஞ்சம் குறையும். எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய என்ன படி எல்லாமே இன்று நடக்கும்.
நீங்கள் நினைத்தது நிறைவேறும். கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் சிறப்பாக இருக்கும். மற்றவர்களுக்கு நீங்கள் கடனாக கொடுத்த பணம் மீண்டும் திரும்ப வந்துசேரும். இன்று உள்ளம் மகிழும் நாளாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். குடும்பத்திலும் ஒற்றுமை மேலோங்கும். இன்று மாணவர்கள் மட்டும் கல்வியில் கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உழைத்து பாடங்களைப் படியுங்கள். படித்த பாடத்தை எழுதிப்பாருங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்
தனுசு ராசி அன்பர்களே..!! இன்று மனதில் பல நாள் இருந்த சங்கடம் இன்று தீரும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணியை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். உபரி பண வருமானம் கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவீர்கள். இன்று கலைத்துறையினர் அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். அரசியலில் உள்ளவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். ஆலயம் சென்று வருவீர்கள். தெய்வீக நம்பிக்கை கூடும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு கூடும். குடும்பத்தில் எந்த வித பிரச்சினை இல்லாமல் சிறப்பாக செல்லும். ஒற்றுமை பலப்படும். சகோதரர் வழியில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும்.
ஆசிரியர்களின் ஆதரவு இருக்கும். சக மாணவரின் ஆதரவும் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதம் கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் வெள்ளை நிறம்
மகரம் ராசி அன்பர்களே..!! உங்களின் எண்ணமும் செயலும் இன்று உற்சாகத்தை பெருக்கும். எளிமையானவர்களுக்கு உதவிகளை செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். பணவரவு நன்மையை கொடுக்கும். பணியாளர்களுக்கு சலுகை இன்று அதிகரிக்கும். இன்று அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய சிறப்பான காரியங்கள் அனுகூலமாக நடந்து முடியும். மாணவர்கள் ஆசிரியர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பது வெற்றிக்கு உதவும். வீண் அலைச்சலை தவிர்ப்பது ரொம்ப முக்கியம். காரியங்களில் இருந்த தடை நீங்கும். செல்வம் சேரும், பொருள் சேரும்.
வாகனம் வாங்க கூடிய யோகம் இன்று இருக்கும் .அதுமட்டுமில்லாமல் பழைய வீட்டை இன்று சீர் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். இன்றையநாள் மனம் புத்துணர்ச்சியாக காணப்படும். கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் கூட ஓரளவு சிறப்பை கொடுக்கும். ஆனால் சில காரியங்களை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நிதானத்துடன் மேற்கொள்வது நல்லது. பெரியோர்களிரிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள். குடும்பத்தைப் பொறுத்தவரை சிறப்பான முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும்.
இன்று தேவையில்லாத பொருட்களை மட்டும் வாங்க வேண்டாம். இந்த விஷயத்தில் நீங்கள் ரொம்ப கவனமாக இருங்கள். இன்று முக்கியமான பணிகளை மேற்கொள்ளும்போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்
கும்பம் ராசி அன்பர்களே..!! செயல்களில் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்படலாம். கடினமான பணிகளில் பாதுகாப்பு பின்பற்றவேண்டும். தொழிலில் திட்டமிட்ட இலக்கு கால அவகாசத்தில் நிறைவேறும். கொஞ்சம் பணக்கடன் பெற நேரிடலாம். மனைவி உங்களுக்கு எப்பொழுதுமே உதவிகரமாக நடந்து கொள்வார். எதையுமே நீங்கள் கொஞ்சம் யோசித்து செய்வது மட்டும் நல்லது. இன்று கடினமாக உழைப்பீர்கள். எதையும் எதிர்பார்க்காமல் உழைப்பீர்கள். எதிர்ப்புகள் அகலும்.
பகை விலகி எதிலும் வெற்றி கிடைக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். இன்று ஓரளவு சிறப்புமிக்க நாளாக இருக்கும். மாணவர்கள் இன்று கல்வியில் கொஞ்சம் கடுமையாக உழையுங்கள். விளையாட்டை ஏறக்கட்டி விட்டு கல்வியில் ஆர்வத்தை செலுத்துங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று முன்யோசனையுடன் செயல்படுவது அவசியமாக படுகிறது. தொழில் வியாபாரத்தில் கூடுதல் பணி உருவாகும். தவிர்க்க இயலாத வகையில் செலவுகள் ஏற்படும். சுற்றுப்புற சூழ்நிலை தொந்தரவால் உங்களுக்கு நித்திரை கெடலாம். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொண்டு சரியான நேரத்திற்கு தூங்க செல்வது மிகவும் சிறப்பு. இன்று மாணவர்களுக்கு படிப்பில் கவனம் அவசியம். குடும்பத்தில் இருந்த மனவருத்தங்கள் மாறி சுமுகமான நிலை காணப்படும்.
கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். வீட்டில் சுபகாரியப் பேச்சுக்கள் சிறப்பாக நடக்கும். திருமண முயற்சிகள் அனைத்தும் கைகூடும். இன்று பிள்ளைகளால் பெருமை உண்டாகும் .உடல் நலம் சிறப்பாக இருக்கும். ஆனால் நீங்கள் வாகனத்தில் செல்லும்போது மட்டும் ரொம்ப கவனமாக செல்ல வேண்டும். அது மட்டுமில்லாமல் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ள வேண்டும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து ஏதும் வேண்டாம்.
இன்று உங்களுக்கு சந்தராஷ்டம் தினம் உள்ளதால் கொஞ்சம் பொறுமையாக செயல்படுங்கள் பார்த்துக்கொள்ளலாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். அனைத்துமே சிறப்பாக நடக்கும். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் நீங்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்