Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் முதல் மீனம் வரை….. ”எந்த ராசிக்கு இன்று அதிஷ்டம்”..!!

மேஷ ராசி அன்பர்களே..!!  இன்று உங்களுக்கு மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். மாற்றுக் கருத்துடையோர் மனம் இன்று மாறுவார்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் அனுபவம் மிக்க பங்குதாரர்கள் வந்து இணைவார்கள். ஆபரணங்கள் வாங்க கூடிய யோகங்களும் உண்டாகும். கட்டிடம் கட்டும் பணி தொடரும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். சக மாணவரின் ஆதரவால் வெற்றிகளும் கிடைக்கும்.

இன்று மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவும் பரிபூரணமாக கிடைக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். தொழில் வியாபாரம் மிகவும் நேர்த்தியாக நடக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி இருக்கும். அதுமட்டுமில்லாமல் வெளியூர் பயணங்களை நீங்கள் இன்று மேற்கொள்வீர்கள். வெளியூர் பயணம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அதுபோலவே இன்று ஆன்மீக எண்ணம் உங்களுக்கு மேலோங்கும். அதாவது தெய்வீக சிந்தனை அதிகமாகவே இருக்கும்.

இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாகவே இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும், பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள், அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்டமான எண் :  1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

 

ரிஷப ராசி அன்பர்களே…!!!  இன்று நீங்கள் சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாகவே மாறும். துணிவும் தன்னம்பிக்கையும் கிடைக்கும். பிரியமானவர்களோடு இருந்த பிரச்சினை அகலும். பூர்வீக சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

சிக்கலான சில விஷயங்களை சாதகமாக பேசி முடித்து விடுவீர்கள். வீண் பயத்தை தவிர்ப்பது நல்லது. இன்று தொழில் வியாபாரத்தில் முன்பு இருந்ததை விட முன்னேற்றம் இன்னைக்கு நல்லாகவே இருக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். இன்று குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்து இருக்கும். வேலை இல்லாத நபர்களுக்கு வேலை கிடைக்கக்கூடிய சூழல் ஓரளவு இருக்கு. இன்று காதல் கைகூடும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும்.

குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும் செல்வம் சேரும் நாளாகவும் இன்றைய நாள் இருக்கும். உடல்நலத்தை பொறுத்தவரை இன்று கொஞ்சம் சுமாராகவே இருக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்து காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

 

மிதுன ராசி அன்பர்களே….!!  இன்று உங்கள் ஆசைகள் நிறைவேற ஆலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. சில காரியங்களில் வெற்றி கிடைக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி இல்லம் தேடி வரக்கூடும்.

காதல் கைகூடும் நாளாக இன்று இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் நீங்கள் மகிழ்ச்சியாக இன்று காலம் கழிப்பீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது தொழிலுக்கு நல்லது.இன்று குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். தேவையற்ற வீண் பேச்சுக்களை குறைப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி ஏற்படும். இன்று வாழ்க்கைத்துணையின் ஆதரவுடன் சில முக்கியப் பணியையும் நீங்கள் நிறைவேற்றுவீர்கள்.பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடலாம். குடும்ப விவாதத்தில் கோபத்தை மட்டும் தவிர்த்து விட்டு பேசுங்கள் அது போதும்.

இன்று மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் செல்லும். கல்வியில் இருந்த தடைகள் விலகி செல்லும். நல்ல முன்னேற்றமான சூழல் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் இன்று உங்களுக்கு சிறப்புவாய்ந்த நிறமாக அமையும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் :நீலம் மற்றும் பச்சை நிறம்

கடக ராசி அன்பர்களே..!!! இன்று உங்களுக்கு மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். நேற்று பாதியில் நின்ற பணி மீதியும் முடியும். மங்கல நிகழ்ச்சி மனையில் நடை பெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். பயணத்தால் பலன் உண்டாகும். தொழில் வளர்ச்சியில் இருக்கும் தடை விலகிச்செல்லும். இன்று எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படலாம். அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் கவனம் இருக்கட்டும். பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் இருக்கும். பொருட்களை மட்டும் கவனமாக பார்த்துக் கொள்வது அவசியம். இன்று நீங்கள் செய்யக்கூடிய விஷயங்கள் ஓரளவு நேர்த்தியாக இருக்கும். கூடுமானவரை கணவன் மனைவி இருவரும் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள் அது போதும்.

குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். அதோடு இன்று அக்கம்பக்கத்தினர் இடம் பேசும் பொழுது மட்டும் கொஞ்சம் நிதானத்தை கடைபிடியுங்கள். தேவையில்லாத வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய சூழல் இருக்கு. பயணங்கள் உங்களுக்கு இன்று நல்லபடியாகவே இருக்கும். பயணங்களால் லாபமும் உங்களுக்கு கிடைக்கும். அதுபோல வழக்கு விவகாரங்களில் நல்ல முன்னேற்றமான சூழல் இருக்கு. காதல் விவகாரங்களில் மட்டும் கொஞ்சம் கட்டுப்பாடுடன் இருப்பது ரொம்ப நல்லது. இன்றைய நாள் ஓரளவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். உடல் நலத்தில் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள்.

இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அவர்கள் எடுக்கக்கூடிய செயல்களில் வெற்றியும் இருக்கும். கூடுமானவரை இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் சிவப்பு நிறம்

சிம்மராசி அன்பர்களே..!!! இன்று உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாளாகவே இருக்கும். தலைமை பதவிகள் தேடி வருவதற்கான அறிகுறிகள் தென்படும். சந்தித்தவர்களால்  சந்தோஷம் உண்டாகும். பிள்ளைகளின் கல்யாண முயற்சி கைகூடும். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காக இருக்கும். சாதுரியமான பேச்சின் மூலம் காரியம் சிறப்பாக நடக்கும். பயணங்கள் செல்ல நேரிடும். கலைத்துறையினர் கொஞ்சம் அனுசரித்துப் போவது நல்லது.

கலைத்துறையில் உள்ளவர்களுக்கு இன்று கொஞ்சம் சிரமமாக இருக்கும். சிறியதாக தடைகள் வந்து செல்லும் பார்த்துக்கொள்ளுங்கள். வீண் பேச்சு மட்டும் குறைத்துக் கொள்ளுங்கள் அது போதும். கணவன் மனைவியைப் பொறுத்தவரை அன்பு இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் இருக்கும். இன்று நீங்கள் சொன்ன சொல்லை பிள்ளைகள் கேட்டு நடந்து கொள்வார்கள். அதுபோலவே உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இன்று உழைப்பு இருக்கும். உழைப்பு இருந்தாலும் மனம் மகிழ்ச்சியாக காணப்படும்.

லாபத்தில் எல்லாம் எந்த குறையும் இல்லை. முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள், மனம் அமைதியாகவே காணப்படும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் விலகி சென்று நல்ல முன்னேற்றம் இருக்கும். இருந்தாலும் பாடங்களை படித்ததை எழுதிப் பாருங்கள், எழுதிப் பார்ப்பது என்பது மிகவும் சிறப்பாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் :  7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் வெள்ளை நிறம்

கன்னி ராசி அன்பர்களே…!!  இன்று பிரச்சனைகள் அகலும் நாளாக இருக்கும். உங்களுடைய பிடிவாத குணத்தை மாற்றிக் கொள்வது சிறப்பு. தொட்ட காரியம் வெற்றி பெறக்கூடும் தொகைவரவு திருப்தியைக் கொடுக்கும். சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகிச் செல்லும். நட்பால் நல்ல காரியம் ஒன்று நிறைவேறும். இன்று கூட்டு வியாபாரம் அனுகூலத்தை கொடுக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.

உத்தியோகஸ்த்தர்கள் தங்களது சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையுமே திறம்பட செய்து முடித்து பாராட்டுக்களைப் பெறுவீர்கள். உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் இன்று கிடைக்கும். மனம் அமைதியாகவே காணப்படும். கணவன் மனைவியை பொருத்தவரை இன்று அன்பு நீடிக்கும். காதல் கைக்கூடும் நாளாகவும் இன்று இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும். உறவினர் வகையிலும் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். ஆனால் சட்டென்று கோபம் மட்டும் கொஞ்சம் தலை தூக்கும் அந்த விஷயத்தில் நீங்கள் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்.

உடல் நிலையைப் பொறுத்தவரை இன்று சுமாரான போக்கே காணப்படும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி இருக்கும். அதுமட்டுமில்லாமல் கொஞ்சம் கடினமாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். கூடுமான வரை படித்த பாடத்தை எழுதிப் பாருங்கள் அது போதும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

துலாம் ராசி அன்பர்களே…!!  இன்று நம்பிக்கைகள் நடைபெறும் நாள் ஆகவே உங்களுக்கு இருக்கும். காலம் கடந்து செய்தாலும் காரியம் நல்லவிதமாக நடந்து முடியும். வாகனம் பராமரிப்பு செலவு கொஞ்சம் இருக்கும். தாய் வழியில் ஏற்பட்ட தகராறில் மாற்றம் ஏற்படும். இன்று உத்தியோக மாற்றம் உறுதியாக கூடும். இன்று பணத்தட்டுப்பாடு கொஞ்சம் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

தனது ஞானத்தால் அனைவரையும் வசீகர படுத்துவீர்கள். உங்களுக்கான அங்கீகாரம் இன்று கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றி அதன்மூலம் மதிப்பையும் மரியாதையையும் பெறுவீர்கள். இன்று மனமகிழ்ச்சி கொள்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். அதுபோலவே இன்று நீங்கள் செய்யக்கூடிய காரியங்களில் நேர்த்தி இருக்கும். அக்கம்பக்கத்தினரிடம் கொஞ்சம் அனுசரித்து செல்லுங்கள். கூடுமானவரை வாக்குவாதங்களை மட்டும் தவிர்த்துவிடுங்கள். இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். முடிந்தால் ஆலய வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கு. அதோடு ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்க பெறுவீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று நீங்கள் சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்து காரியங்களும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

விருச்சிக ராசி அன்பர்களே..!!!  இன்று உங்களுக்கு முயற்சிகளில் வெற்றிகிட்டும் நாளாகவே இருக்கும். கையில் காசு, பணப்புழக்கம் உங்களிடம் ஓரளவு இருக்கும். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவம் ஒன்று நடைபெறும். கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும். வீடு வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் பொழுது கொஞ்சம் அந்த ஒப்பந்தத்தை சரியான முறையில் படித்து பார்த்துவிட்டு பின்னர் கையெழுத்து போடுவது ரொம்ப நல்லது. கூடுமானவரை பெரியோர்களிடம் ஆலோசனை கேளுங்கள். வாகனத்தில் செல்லும்பொழுது ரொம்ப பொறுமையாக செல்ல வேண்டும். அதுபோலவே கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

கூடுமானவரை இன்று ஒருமுறைக்கு இருமுறை காரியத்தை செய்வதற்கு முன் யோசனை செய்து, பெரியோர்களிடம் ஆலோசனை செய்து செய்வது சிறப்பு. இன்றைய நாள் ஓரளவு சிறப்பை கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து சேரும். கூடுமானவரை அவர்களிடம் பேசும்போது நிதானமாகப் பேசுங்கள். பிரச்சனை பெரியதாக ஆகும் என்றால் நீங்கள் பேசாமல் இருப்பதே ரொம்ப சிறப்பு.

இன்று மாணவர்கள் கொஞ்சம் கடினமாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். படித்த பாடத்தை தயவுசெய்து எழுதிப்பாருங்கள். எழுதி பார்ப்பதினால் உங்கள் மனம் நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்ச் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் என்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்

தனுசு ராசி அன்பர்களே..!!!  இன்று உங்களுக்கு நல்ல தகவல்கள் இல்லம் தேடி வரக்கூடும். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பண நெருக்கடிகள் தீரும். உடன்பிறப்புக்கள் கேட்ட உதவிகளை மறுக்காமல் செய்து கொடுப்பீர்கள். வாகனம் மாற்றம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். இன்று குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் சரியாகும்.

கணவன் மனைவியிடையே இருந்துவந்த மனக்கசப்புகள் மாறும். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். புதிய நண்பர்களின் சேர்க்கை, அவரால் உதவியும் உண்டாகும். இன்று வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். வெளியூரிலிருந்து உங்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும். இன்று அக்கம் பக்கத்தினர் இடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள் அது போதும். வாக்குவாதங்களை முற்றிலும் இன்று தவிர்த்து விடுங்கள்.

இன்று மாணவர்களுக்கு கல்வியில் கொஞ்சம் தடை இருக்கும். கொஞ்சம் கடினபட்டுத்தான் தான் முன்னேற வேண்டியிருக்கும். ஆசிரியரின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான  திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

மகர ராசி அன்பர்களே..!!!  இன்று நீங்கள் அடிப்படை வசதிகளைப் பெறுவதற்கு அதிகமாக செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆதாயம் தரும் தகவல்கள் அலைபேசியின் மூலம் வந்து சேரும். சுப செலவுகள் உண்டாகும். பேச்சு திறமையால் சூழ்ச்சிகளில் இருந்து விடுபடுவீர்கள். தடைகள் விலகி செல்லும். பிள்ளைகளை மேற்பார்வையில் வைத்துக் கொள்வது தான் சிறப்பு. இன்று புதிய வாகனம் வாங்குவதற்கான யோகங்கள் இருக்கு.

ஆபரணங்கள் சேர்க்கை சேரும். தடைப்பட்ட காரியங்களை செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுப்பதாக இருக்கும். மனம் உற்சாகமாக காணப்படும். உங்களுடைய சிந்தனை திறன் அதிகரிக்கும். அலுவலகம் செல்வோர்க்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் மேல் அதிகாரியிடம் கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள். இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாகவே இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும்.

அது மட்டுமில்லாமல் குடும்பத்தில் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலையும் நிலவும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய, கொஞ்சம் கடினமாக உழையுங்கள். கடினப்பட்டு உழைத்து பாடங்களைப் படியுங்கள். விளையாட்டை தயவுசெய்து ஏறக்கட்டி விட்டு பாடங்களில் நீங்கள் கவனம் செலுத்துவது ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் சித்தர்கள் வழிபாடு இன்று உங்களுக்கு சிறப்புமிக்க வழிபாடாக அமையும். நீங்கள் செய்யக் கூடிய காரியங்களை சிறப்பானதாக ஆக்கி கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்

கும்ப ராசி அன்பர்களே…!!!  இன்று உங்களுக்கு இடமாற்றம் பற்றிய இனிய தகவல்கள் வந்து சேரும் நாளாக இருக்கும். விருந்தினர் வருகை உண்டாகும். பயணத்தில் பழைய நண்பர்களை சந்தித்து பேச கூடிய சூழல் இன்று இருக்கு. இன்று வருமானம் போதுமானதாக இருக்கும். துணிந்து எடுத்த முடிவால் தொழிலில் வெற்றி கிடைக்கும். இன்று கலைத் துறை சார்ந்தவர்களுக்கு எதிலும் கவனம் இருக்கட்டும். உடன் பணிபுரிபவர்களிடம் சண்டைகள் ஏற்படும் சூழ்நிலைகள் இருக்கு. கூடுமானவரை வாக்குவாதங்கள் இல்லாமல் நடந்து கொள்ளுங்கள்.

அடுத்தவர் பிரச்சினைகளில் தயவுசெய்து தலையிட வேண்டாம். பஞ்சாயத்து பண்ணுகிறேன் என்று தயவு செய்து செல்ல வேண்டாம். இந்த விஷயத்தை நீங்கள் இன்று ரொம்ப கவனமாக உணர்ந்து கொள்ளுங்கள்.அது மட்டும் இல்லாமல் இன்று செய்தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முயற்சிகளில் கூட வெற்றி இருக்கும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாகவே இருக்கும். உங்களுக்கு துணிச்சல் இன்று அதிகமாகவே காணப்படும். உடலில் வசீகரத் தன்மை கூடி காதல் வயப்பட கூடிய சூழலும் இன்று இருக்கும்.

இன்று மாணவர்களுக்கு மட்டும் கல்வியில் கொஞ்சம் கடினப்பட்டு உழைத்து முன்னேற வேண்டியிருக்கும். கூடுமானவரை படித்த பாடத்தை எழுதிப்பாருங்கள். மிகவும் நன்றாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாடு உங்களை சிறப்பாக வழி நடத்தும். காரியங்களை எளிதாகச் செய்ய வைக்கும், காரியத்தில் வெற்றியும் கிடைக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும்  7

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்

மீன ராசி அன்பர்களே..!!  இன்று உங்களுக்கு தெய்வீக நம்பிக்கை கூடும் நாளாகவே இருக்கும். சேமிப்பை உயர்த்தக்கூடிய எண்ணம் உருவாகும். திடீரென எடுத்த முடிவால் சிலரது எதிர்ப்புகளுக்கு நீங்கள் ஆளாக கூடும் பார்த்துக் கொள்ளுங்கள். நூதன பொருட்சேர்க்கை இன்று உண்டாகும். உங்களுடைய பேச்சில் இன்று நிதானம் வேண்டும், அதையும் கவனத்தில் கொள்ளுங்கள். அந்நிய தேசத் தொடர்பு அனுகூலத்தை கொடுக்கும். இன்று ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதனை செயல்படுத்துவதில் கொஞ்சம் தாமதமும் சிரமமும் இருக்கும். பேச்சில் நிதானத்தை கண்டிப்பாக இன்று நீங்கள் கடைப்பிடித்தே ஆக வேண்டும்.

அரசியல் துறையினருக்கு மற்றவருடன் கருத்து வேறுபாடு ஏற்படாமல், கவனமாக இருப்பது நல்லது. இன்றைய நாள் ஓரளவு சிறப்புமிக்க நாளாகவே இருக்கும். கணவன் மனைவிக்கிடையே எந்த ஒரு விஷயத்தையும் பேசி தீர்த்துக்கொள்வது நல்லது. இன்று வெளியூர் பயணத்தின் பொழுது உடைமைகள் மீதும் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று மாணவர்களுக்கு விளையாட்டு துறையில் ஆர்வம் செல்லும். இருந்தாலும் பாடங்களில் மட்டும் கொஞ்சம் கடினமாக உழைத்து படியுங்கள் அது போதும். படித்த பாடத்தை நல்ல முறையாக எழுதிப் பாருங்கள், நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |