Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் முதல் மீனம் வரை….. ”எந்த ராசிக்கு இன்று அதிஷ்டம்”….!!

மேஷ ராசி அன்பர்களே….!! இன்று நீங்கள் மனதில் பட்டதை பட்டென்று சொல்லும் நாளாக இருக்கும்.நீங்கள் எடுத்த முயற்சி அனைத்தும் வெற்றியை கொடுப்பதாக இருக்கும். மனதில் இருந்த திட்டம் செயல்வடிவம் பெறும். வியாபாரத்தில் நிலுவைப் பணியை நிறைவேற்றுவீர்கள்.  உபரி பண வருமானம் கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.

இன்று எச்சரிக்கையுடன் எதிலும் கொஞ்சம் ஈடுபடுங்கள் அது போதும். அவசரமாக எதையும் செய்ய வேண்டாம். சுனக்கத்தில் இருந்த காரியங்கள் வெற்றி அடைவதுடன் , பணவரவும் கூடும். உடல் சோர்வு கொஞ்சம் இருக்கும். இன்று வீண் வாக்குவாதங்கள் ஆகியவை ஏற்படும். அதுமட்டுமில்லாமல் வீண் செலவுகளும் கொஞ்சம் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள்.

இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேறுவதற்கு கொஞ்சம் கஷ்டப்பட்டு படியுங்கள் , அதுமட்டுமில்லாமல் பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும்.அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். இதனால் உங்களுடைய கர்ம தோஷங்கள் நீங்கி , செல்வச் செழிப்பை ஏற்படுத்தி கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்டமான எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

ரிஷப ராசி அன்பர்களே…!!  இன்று அதிகம் பேசுவதை தவிர்க்க வேண்டும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு அவசியம். பணவரவு கிடைப்பதில் தாமதம் இருக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல் திறமை மூலம் கடின பணிகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். கஷ்டம் இல்லாத சுக வாழ்க்கை ஏற்படும். இன்று வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் ஏற்படும். திருமண முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். ஆடை ஆபரணங்கள் சேரும் , விருந்தினர்கள் வருகை இருக்கும். கணவன் , மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும்.

இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். அதுமட்டுமில்லாமல் கல்வியில் இருந்த தடையும் விலகிச்செல்லும். இன்று ஆசிரியர்கள் ஒத்துழைப்பும் கிடைக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்திலான ஆடை அணிந்து கொள்ளுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும்.

அதுபோலவே இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். அது உங்களுடைய வாழ்க்கையில் இருந்த கர்ம தோஷங்கள் அனைத்தையும் நீக்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் மஞ்சள்

Related image

மிதுனம் ராசி அன்பர்களே…!! இன்று அவசர பணி உருவாகி அல்லல் தரக்கூடும். கருணை மனம் இல்லாதவரிடம் உதவி கேட்க வேண்டாம். தொழில் வியாபாரம் தாமத கதியில் இயங்கும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும்.  பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம். இன்று குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்க கூடும். வழக்குகள் சாதகமான நிலையில் இருக்கும். புத்திரர்கள் இடம் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும்.

வாடிக்கையாளர்களின் ஆதரவு நீடிக்கும். தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்கப் பெறுவார்கள்.இன்றைய நாள் ஓரளவு சிறப்புமிக்க நாளாகவே இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும்.

அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதம் கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

கடகம் ராசி அன்பர்களே…!! இன்று பெரியவர்களின் வழிகாட்டுதலை பின்பற்றுவீர்கள். தொழில் வியாபாரம் புதிய யுக்தியால் செழித்து வளரும். உபரி வருமானம் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை இன்று நீங்கள் வாங்க கூடும். மனைவியின் அன்பு பாசம் மகிழ்ச்சியை கொடுக்கும். இன்று நன்மை அதிகமாகவே உண்டாகும். பணவரவும் இருக்கும். வாகனம் யோகம் கொடுக்கும்.

பெரியோர்களின் உதவிகள் கிடைக்கும் , மனதில் தைரியம் உண்டாகும். எதிலும் தயக்கமோ , பயமோ இன்று  இருக்காது. தொழில் வியாபாரம் நல்லபடியாக நடந்தேறும். வாக்கு வன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும் அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலனையே கொடுக்கும். அலைச்சல் மட்டும் கொஞ்சம் அதிகரிக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். இன்று மாணவர்கள் கொஞ்சம் கடினமாக உழையுங்கள்.பாடங்களை  நன்றாக படியுங்கள்.

இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது வெள்ளை ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் அதிஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமல்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக வழங்குங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

சிம்ம ராசி அன்பர்களே….!! இன்று அடுத்தவர் மீதான நம்பிக்கை உங்களுக்கு குறையும். தொழில் வியாபாரத்தில் உருவாகிற குளறுபடியை தாமதமின்றி சரி செய்வது நல்லது. முக்கிய செலவுக்கு தேவையான பணம் கிடைக்கும். வெளியூர் பயணத் திட்டத்தில் மாறுதல் இருக்கும். இன்று கணவன் , மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்கள் உங்களை மதிப்பது மனதுக்கு இதமளிக்கும். பெண்களுக்கு மனதில் குழப்பம் ஏற்படும்.

உங்களிடம் ஆலோசனை கேட்டு உங்களை நாடி சிலர் வரக்கூடும். உத்தியோகத்தில் உயர்வு பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனையே கொடுக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். மனநிம்மதி உண்டாகும். அரசாங்க காரியம் அனுகூலத்தை கொடுக்கும். உடல் ஆரோக்கியம் இன்று பாதிக்கப்படலாம். ஆகவே கொஞ்சம் கவனமாக இருங்கள்.

இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். அதுமட்டுமில்லாமல் இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் நீங்கள் எள் கலந்த சாதத்தை அன்னமாக காக்கைக்கு கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று அதிஷ்ட திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 7

அதிஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்

கன்னி ராசி அன்பர்களே…..!! இன்று தாமதமான செயலில் அனுகூலப் பலன்கள் தேடும் வரக் கூடும். உங்களின் தனித்திறமையை பலரும் அறிந்து கொள்வார்கள். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும் , பணப்பரிவர்த்தனை சீராக இருக்கும். வாகனத்தில் கூடுதல் வசதி பெற தேவையான மாற்றங்களைச் செய்வீர்கள்.இன்று மனதில் தைரியம் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். உங்கள் இஷ்டத்திற்கு விரோதமான காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாகவே இருக்கும்.

வீண் ஆசைகள் மனதில் தோன்றும் , மன கஷ்டம் குறையும். ஆனால் செலவு கொஞ்சம் அதிகரிக்கும். இடமாற்றம் ஏற்படலாம். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருப்பது நல்லது. கடன் தொல்லை கொஞ்சம் இருக்கும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருப்பது ரொம்ப நல்லது. இன்று மாணவர்கள் கொஞ்சம் கஷ்டப்பட்டு பாடங்களைப் படியுங்கள். அப்போதுதான் பாடங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமல்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த உணவை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் பச்சை நிறம்

துலாம் ராசி அன்பர்களே….!! இன்று வெளிவட்டாரத் தொடர்பு தொந்தரவையும் கொடுக்கலாம். சொந்த பணியை நிறைவேற்றுவது நல்லது. தொழில் வியாபாரம் சுமாரான அளவில் இருக்கும். அளவான பணவரவு கிடைக்கும்.இன்று நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும் , எதிர்ப்புகள் அகலும் , பணவரவு கூடும். பிள்ளைகளுக்கு கல்வியில் வெற்றி உண்டாகும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். விளையாட்டுகளில் ஆர்வம் ஏற்படும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும் , உத்தியோகத்தில் கூடுதல் கவனம் இருப்பது நல்லது.

ஒருமுறைக்கு இருமுறை தொழில் சார்ந்த விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு முன் யோசித்து செய்யுங்கள் அது போதும்.இன்று கணவன் , மனைவிக்கிடையே அன்பு இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும் , மகிழ்ச்சியும் இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.  மஞ்சள் நிறம் உங்களுக்கு உகந்த நிறமாக  இருக்கும்.

அதுமட்டுமல்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் மஞ்சள்

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று மனதில் அன்பும் கருணையும் அதிகரிக்கும். தொழில் வியாபார வளர்ச்சியால் புதிய பரிமாணம் ஏற்படும். பண பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வெகுநாள் வாங்க நினைத்த பொருட்களை வாங்க கூடும். இன்று கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி நீங்கும். இனிமையான பேச்சின் மூலம் எல்லாவற்றையும் நல்ல முறையில் செய்து முடிப்பீர்கள். புத்திரர்கள் வழியில் மனவருத்தம் கொஞ்சம் உண்டாகலாம். மற்றவர்களுடன் வீண் விவாதம் கொஞ்சம் ஏற்படலாம்.

கவனம் இருக்கட்டும். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி துணிச்சல் உண்டாகும். மற்றவர்களுடன் விரோதம், கௌரவ பங்கம், வீண் அலைச்சல், உடல் உழைப்பு ஆகியவை ஏற்படக்கூடும். கொஞ்சம் பொறுமையாக இருங்கள் அது போதும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் ஆசிரியரின் ஒத்துழைப்பு கிடைக்கும். அதனால் வெற்றி பெறக் கூடிய சூழல் இருக்கும்.

விளையாட்டுத் துறையிலும் ஆர்வம் அதிகரிக்கும். இன்று முக்கியமான பணியை  நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்க கூடிய  அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை தானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் நீங்கி அனைத்து விதமான செல்வச் செழிப்பையும் ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று இனிய அனுபவத்தை உறவினரிடம் சொல்வீர்கள். அவர் மனதில் உங்களைப் பற்றிய நல்ல மதிப்பு உருவாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி பெருமளவில் குறையும். உபரி பண வருமானம் கிடைக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். இன்று மனநிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். ஆடை ஆபரணங்கள் சேரும். மங்கள காரியங்கள் நடைபெறும். பிள்ளைகளுக்கு கல்வியில் இருந்த தடை விலகி செல்லும்.

கடின உழைப்பும் முயற்சிகளில் வெற்றி பெரும் திறனும் அடைவீர்கள். நீண்ட நாட்களாக போட்டிருந்த திட்டம் முழுவதுமாக செயல்பட வாய்ப்பு இருக்கும். எதிர்த்து செயல்பட்டவர்கள் ஒதுங்கி விடுவார்கள். இன்று மேலிடத்தின் செயல்கள் நிம்மதியை பாதிப்பதாக கொஞ்சம் இருக்கும். இன்று எல்லா வகையிலுமே உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று பிறருக்கு நல்லதை செய்தும் மனவருத்தம் கொஞ்சம் ஏற்படலாம். சமூக நிகழ்வுகளில் ஒதுங்கியிருப்பது நல்லது. தொழிலில் கூடுதல் பணிபுரிவதால் வளர்ச்சி கூடும். பணவரவு திருப்திகரமான அளவில் கிடைக்கும். உணவுப் பொருட்களை தரம் அறிந்து உண்ணுங்கள். புத்தி கூர்மையுடன் செயல்படுவீர்கள் தைரியம் இன்று  உண்டாகும். செலவுகள் அதிகரிக்கச்செய்யும். வேண்டியவர்களுடன் மனஸ்தாபங்கள் கொஞ்சம் ஏற்படலாம். கூடுமானவரை வாக்குவாதங்கள் ஏதும் வேண்டாம். தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.

தேவையான பண உதவி கிடைப்பதிலும் புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். தொழில் வியாபாரத்திற்காக இன்று கொஞ்சம் அலைய வேண்டியிருக்கும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு உழைப்பு அதிகமாகவே இருக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். குடும்பத்தில் பாசம் நிறைந்திருக்கும். சகோதரர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதம் கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் கர்ம தோஷங்கள் இருந்தால் அனைத்துமே சரியாகிவிடும். உங்களுக்கு செல்வச் செழிப்பான யோகத்தைக் கொடுக்க கூடியதாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படலாம். அவப்பெயர் வராதபடி செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் கூடுதல் முயற்சியால் சீராகும் பணவரவு குறைந்த அளவில் இருக்கும். அதிகம் பயன் தராத பொருட்களை விலைக்கு வாங்க வேண்டாம். இன்று குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் ஏற்படலாம் கவனம் இருக்கட்டும். குடும்ப செலவுகள் அதிகரிக்கும். ஆயுதங்கள் நெருப்புகள் பயன் படுத்தும் போது கவனமாக இருங்கள்.

கணவன் மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கை வேண்டும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டியவை  கொஞ்சம் தாமதப்பட்டு தான் வரும். வீட்டுக்கு தேவையான பொருட்களை இன்று வாங்க கூடும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். இன்று ஆசிரியர்களின் சொல்படி நடந்து கொள்ளுங்கள். சக மாணவர்களிடம் எந்தவிதமான வாக்குவாதங்களும் வேண்டாம்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். வெள்ளை நிறம் அதிஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதம் கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை :  தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் இளம் பச்சை நிறம்

Image result for ராசி

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று சாதனை நிகழ்த்தும் வாய்ப்பு உங்களை தேடி வரக்கூடும். பணிகளை திறம்பட நிறைவேற்றுவீ ர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை அளவு சிறப்பாக இருக்கும். நிலுவைப்பணம் வசூலாகும். நண்பருக்கு தேவையான உதவிகளை புரிவீர்கள். வீண் அலைச்சல் அதிகமாகவே இன்று இருக்கும். கவனமாக இருங்கள். புத்தி கூர்மையுடன் செயல்படுவது எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவும். எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையி டாமல் இருப்பதும் நன்மையை கொடுக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு செய்வதன் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் கொஞ்சம் இருக்கும். இன்று எந்த வகையிலும் நீங்கள் பொறுமையை கடைபிடிப்பது ரொம்ப சிறப்பு. இன்று கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன பூசல்கள் ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். பொறுமையை கையாளுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள்.

கூடுமானவரை எப்பொழுதும் சொல்வது போலவே படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் அதிஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |