மேஷ ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் மனதில் நல்ல சிந்தனை அதிகரிக்கும். தன்னை சார்ந்தவர்களுக்கு இயன்ற அளவில் உதவிகளை புரிவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை சிறப்பாக இருக்கும். திருப்திகரமான அளவில் பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். இன்று முயற்சிகள் அனைத்து விதத்திலும் சாதகமான பலனையே கொடுக்கும். பணவரவு தாராளமாக இருக்கும்.
உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். கலைத்துறையினருக்கு இன்று சிறப்பான நாளாக அமையும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் இருக்கும். இன்று கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகி மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல், இன்று ஆலயம் சென்று வருவீர்கள். ஆன்மீகத்திற்காக சிறு தொகையையும் செலவிடுவீர்கள். இன்று ஆன்மீக எண்ணங்கள் உங்களுக்கு மேலோங்கும்.
இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். சக மாணவர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்டமான எண் : 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்
ரிஷப ராசி அன்பர்களே…!! இன்று நீங்கள் நண்பர்களிடம் வெளிப்படையாகப் பேசுவதில் தயக்கம் கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாக இருக்கும். அதிக உழைப்பால் மட்டுமே பணவரவு சீராக இருக்கும். செல்ல பிராணிகளிடம் விலகியிருப்பது நல்லது. இன்று ரகசியங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது சிறப்பு. கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் பெறுவதற்கு எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும்.
வீண் மனக்கவலை கொஞ்சம் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். கூடுமானவரை நிதானமாக செயல்படுங்கள். அதுமட்டுமில்லாமல் வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. இன்று ஆன்மீக பணிகளில் நாட்டம் செல்லும். தெய்வத்திற்கு சிறு தொகையை இன்று செலவிட நேரிடும். இன்று கணவன் மனைவிக்கிடையே சின்னசின்ன பூசல்கள் இருக்கும். கூடுமானவரை பேசும்பொழுது கொஞ்சம் கவனமாக பேசுங்கள். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும்.
சகோதர வழியில் உங்களுக்கு உதவிகளும் கிடைக்கும். இன்று மாணவர்கள் கொஞ்சம் கடினப்பட்டு பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். கஷ்டப்பட்டு படியுங்கள் படித்த பாடத்தை எழுதிப் பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் அதிர்ஷ்டத்தைக் கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் உங்களுக்கு நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 4 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்
மிதுன ராசி அன்பர்களே..!!! இன்று சிறு நிகழ்வு உங்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். தெய்வ நம்பிக்கையுடன் செயல்படுவதால் பணி சீராக நிறைவேறும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். பண பரிவர்த்தனையில் கவனம் இருக்கட்டும். பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்ல வேண்டாம். இன்று பணவரவு இருக்கும். எதிர்ப்புகள் விலகி செல்லும். தடைப்பட்ட காரியங்களை மீண்டும் செய்து முடிக்க தேவையான முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள்.
மனதில் புதிய உற்சாகமும் தைரியமும் பிறக்கும். இன்று சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். சமூகத்தில் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். கடன்கள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கும். பழைய பாக்கிகள் ஓரளவு வசூலாகும். நிதி மேலாண்மை ரொம்ப சிறப்பாகவே இன்று இருக்கும். கணவன் மனைவிக்கிடையே சின்னச்சின்ன பூசல்கள் இருக்கும். கூடுமானவரை வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். நண்பர்களிடம் பேசும் பொழுது வாக்குவாதங்கள் இல்லாமல் பேசுங்கள். அதுமட்டுமில்லாமல் இன்று யாருக்கும் எந்தவித பஞ்சாயத்துகளும் செய்ய வேண்டாம். அதில் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள்.
திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண முயற்சி கை கூடுவதாக இன்று இருக்கும். இன்று மாணவக் கண்மணிகள் கொஞ்சம் கடினமாக உழையுங்கள். படித்த பாடத்தை தயவுசெய்து எழுதிப்பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிற ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அனைத்து காரியங்களும் சிறப்பாகவே நடக்கும்.
கடக ராசி அன்பர்களே..!!! இன்று நீங்கள் மனசாட்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். திட்டமிட்ட பணிகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தொழில் வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். உபரி பணவரவு கிடைக்கும்.நண்பர்கள் முன்பு கேட்ட உதவியை செய்வீர்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும்.
அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டியிருக்கும். மேலிடத்திலிருந்து பாராட்டுகள் குவியும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இன்று நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் வெற்றிகரமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் வெளியூர் பயணத்தின் போது உடைமைகள் மீது கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று மிக முக்கியமாக தாய் தந்தையரின் உடல்நலத்தில் கொஞ்சம் கவனம் வேண்டும். அது மட்டுமில்லாமல் இன்று மற்றவர்களிடம் எந்தவித வாக்குறுதிகளையும் கொடுக்க வேண்டாம். பொறுமையை கையாளுங்கள்.
பண விஷயத்தில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள் அது போதும். இன்று கணவன் மனைவிக்கிடையே சின்னசின்ன பொசல்கள் இருக்கும். பேச்சுவார்த்தை என்பது ரொம்ப கவனமாக பேசுங்கள். வீண் வாக்குவாதங்களை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். இன்று மாணவச் செல்வங்கள் கொஞ்சம் கவனமாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். படித்த பாடத்தை கவனமாக எழுதிப்பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்து காரியமும் உங்களுக்கு நல்லபடியாகவே நடக்கும்.
சிம்ம ராசி அன்பர்களே…!! இன்று உங்கள் மனதில் இருந்த தயக்கம் விலகிச் செல்லும். பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். பண பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் கேட்ட உதவியை இன்று நீங்கள் செய்து கொடுப்பீர்கள். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகிச்செல்லும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் இருந்த சிக்கல்கள் தீரும்.
மனம் இன்று கொஞ்சம் அலைபாய கூடும். இந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். மனம் அமைதியாக இருக்கும். ஏற்றுமதி தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான சூழல் இருக்கும். அதுமட்டுமில்லாமல், பங்குச்சந்தையில் உள்ளவர்களுக்கும் நல்ல லாபகரமான சூழல் இன்று இருக்கு. இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். தாய் தந்தையரின் உடல் நலத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள்.
இன்று மாணவர்களுக்கு கொஞ்சம் கடினமான சூழல் இருக்கும். கூடுமானவரை கடினப்பட்டு பாடங்களை படியுங்கள். படித்த பாடத்தை எழுதிப்பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
கன்னி ராசி அன்பர்களே..!!! இன்று உங்களின் எதார்த்தப் பேச்சு அனைவரையும் கவரும் விதமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகிச் செல்லும். இன்று சொத்தின் பேரில் கடன் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நம்பிக்கை உரியவரை நீங்கள் இன்று சந்திக்க நேரிடும். இன்று எதிலும் அதிகம் சிரமம் எடுத்து கொஞ்சம் உழைக்க வேண்டியிருக்கும். மனம் அமைதியாகவே காணப்படும். காலம் தவறாத பேச்சினால் அனைவரிடமும் நீங்கள் நல்ல பெயர் எடுப்பீர்கள், சமூகத்தில் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். அது மட்டுமில்லாமல் சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். மற்றவர்கள் மீது அன்பாக இருப்பீர்கள். இன்று அதனால் மகிழ்ச்சி உங்களுக்கு ஏற்படும்.
தெய்வீக சிந்தனை மேலோங்கும். தெய்வத்திற்கு சிறு தொகையை நீங்கள் செலவிட நேரிடும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு சிறப்பை கொடுப்பதாகவே அமையும். இன்று திருமண முயற்சிகளை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடக்கும். உங்களுடைய உடலில் வசீகரத் தன்மை கூடுவதால் காதலில் வயப்படக்கூடிய சூழல் இன்று இருக்கு.
இன்று மாணவர்கள் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். கல்வியில் இருந்த தடை விலகிச்செல்லும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
துலாம் ராசி அன்பர்களே..!!!! சிலரது பேச்சு இன்று மனதில் சங்கடத்தை உருவாக்கி கொடுக்கும். காலத்தின் அருமையை உணர்ந்து இன்று பணியில் ஈடு படுவீர்கள். தொழில் வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். நிலுவைப்பணம் கூடுதல் முயற்சியால் வரவாகும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுகளை மட்டும் உண்ண வேண்டாம். இன்று தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள்.
உடன் பணிபுரியும் நபர்கள் மூலம் நன்மை ஏற்படும். இன்று பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும் அரசியல் துறையினர் புதிய முடிவுகளை எடுக்கக் கூடும் நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். ஆன்மீக சுற்றுலாக்கள் சென்று வருவதற்கான வாய்ப்புகளும் இன்று கிடைக்கும். தெய்வத்திற்காக சிறு தொகையையும் இன்று நீங்கள் செலவிடுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். நீங்கள் சொல்வதை மற்றவர்கள் புரிந்து கொண்டு, அதற்கு ஏற்றார் போல் நடப்பது உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.
இன்று மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து படியுங்கள். படித்த பாடத்தை எழுதி பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.
விருச்சிக ராசி அன்பர்களே…!! இன்று உங்களின் நல்ல செயலை நண்பர்கள் பாராட்டக் கூடும். தொழில் வியாபாரம் செழித்து வளர்வதற்கு தேவையான மாற்றங்களைச் செய்வீர்கள். லாபவிகிதம் அதிகரிக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு விலகிச் செல்லும். இன்று பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்று எண்ணம் ஏற்பட்டு நீங்கும்.
வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு காணப்படும். கொடுக்கல்-வாங்கல் விஷயங்களிலும் கொஞ்சம் கவனமாக இருங்கள். வாக்குறுதிகள் யாருக்கும் இன்று கொடுக்க வேண்டாம். வாகனத்தில் செல்லும் போது பொறுமையை மட்டும் கையாளுங்கள். இன்று கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன பொசல்கள் இருக்கும், பார்த்துக் கொள்ளுங்கள். பேசும்பொழுது நிதானமாக நடந்து கொள்ளுங்கள்.
இன்று மாணவ கண்மணிகளுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். இருந்தாலும் படித்த பாடத்தை நினைவில் வைத்துக் கொள்வதற்கு, ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
தனுசு ராசி அன்பர்களே…!!! இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விஷயத்தை பேச வேண்டாம். பணியை தாமதமின்றி நிறைவேற்றுவது நல்லது. தொழில் வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். பணம் செலவில் சிக்கனத்தைக் நீங்கள் பின்பற்ற வேண்டும். வாகன பாதுகாப்பில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். இன்று தன்னம்பிக்கைக்கு மதிப்பளிப்பது, அதனால் வெற்றி பெறுவீர்கள். மனம் கொஞ்சம் தெம்பாக காணப்படும்.
மகிழ்ச்சி உண்டாகும் சில விஷயங்களை மேற்கொள்ளும் பொழுது ரொம்ப பொறுமையாக செய்ய வேண்டும். கூடுமானவரை மற்றவர்கள் சொல்லை நீங்கள் கூர்ந்து கவனித்து, அதற்கு ஏற்றார் போல் நீங்கள் பதில் கொடுப்பது நல்லது. பணவரவு ஓரளவு சிறப்பாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் வெளியூர் பயணத்தை தவிர்ப்பது முற்றிலும் நல்லது. வெளியூர் பயணம் உங்களுக்கு அலைச்சலை கொடுக்க கூடியதாகவே இருக்கும். பங்கு சந்தையில் உள்ளவர்களுக்கு இன்று நல்ல லாபம் கிடைக்கும். இந்த விஷயத்தில் கொஞ்சம் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் உங்களுக்கு கிடைக்கும் சூழலும் இருக்கு.
இன்று மாணவர்கள் கொஞ்சம் கடினமாக உழைத்து படியுங்கள். படித்த பாடத்தை எழுதிப் பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல்இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் அனைத்து காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
மகர ராசி அன்பர்களே…!! இன்று நீங்கள் எளிய அணுகுமுறையால் நல்லவர்கள் மனதில் நீங்கள் இடம் பிடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். தாராள அளவில் பணவரவு இருக்கும். வீட்டு உபயோக பொருட்களை நீங்கள் இன்று வாங்க கூடும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் இருக்கும். இன்று தன்னம்பிக்கைக்கு மதிப்பளித்து வெற்றிபெறும் நாளாகவும் இருக்கும். மனம் இன்று ரொம்ப மகிழ்ச்சியாகவே காணப்படும். எடுக்கக்கூடிய முயற்சியில் வெற்றி இருக்கும். சொன்ன சொல்லையும் நிறைவேற்றிக் காட்டுவீர்கள். சமூகத்தில் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும்.
ஆதரவற்ற குழந்தைகளுக்கு நீங்கள் உணவளித்து மகிழ்ந்து கொள்வீர்கள். இன்று மற்றவர்களுக்கு உதவி செய்வதையே குறிக்கோளாக வைத்துக் கொள்வீர்கள். அதுமட்டுமில்லாமல் இன்று ஆன்மீக எண்ணம் மேலோங்கும் தெய்வத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். அக்கம் பக்கத்தினரின் அன்பும் இன்று உங்களுக்கு கிடைக்கும். இன்று செய் தொழிலில் நல்ல முன்னேற்றம் உங்களுக்கு இருக்கும். புதிய தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான முயற்சிகள் உங்களுக்கு சாதகமான பலனையே கொடுக்கும். இன்று எந்த விஷயத்தையும் நீங்கள் தைரியமாக மேற்கொள்ளலாம். நல்ல முன்னேற்றம் இருக்கும்.
இன்று மாணவ கண்மணிகளுக்கு வெற்றிகள் குவிய கூடிய சூழல் இருக்கு. தொட்டதெல்லாம் துலங்கும் நாளாக இன்று இருக்கும். இருந்தாலும் முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் என்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.
கும்ப ராசி அன்பர்களே…!! இன்று நீங்கள் அதிகம் பேசுவதை தவிர்ப்பதால், சுய கௌரவத்தை பாதுகாக்க கூடும். தொழில் வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். முக்கிய செலவுக்கான பணவரவு கிடைக்கும். புத்திரரை வழி நடத்துவதில் இதமான அணுகுமுறை வேண்டும். அவர்களிடம் கோபப்பட வேண்டாம். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணவரவு திருப்தியை கொடுக்கும், ஆனால் எதிர்பார்த்த அளவு இருப்பதுதான் ரொம்ப கஷ்டம். மேலிடத்தின் கனிவான பார்வையால் புகழும் பெறுவீர்கள்.
குடும்பத்தில் ஓரளவு மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். இன்று கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் ஓரளவு முன்னேற்றத்தை கொடுக்கும். இருந்தாலும் யாரிடமும் இன்று கடன்கள் மட்டும் வாங்காதீர்கள். அந்த வேலையை இன்று தவிர்த்து விடுங்கள் அது போதும். அது போலவே புதிய முயற்சிகள் கூட இன்று வேண்டாம். பொறுமையாக இருங்கள், மனதில் தெய்வத்தை நினைத்துக் கொண்டு தியானம் செய்யுங்கள் அது போதும்.
இன்று மாணவர்கள் கொஞ்சம் கவனமாக உழையுங்கள், அப்பொழுது தான் படித்த பாடம் நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக அமையும். அதுபோலவே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
மீன ராசி அன்பர்களே…!!! இன்று நீங்கள் இஷ்ட தெய்வ நம்பிக்கையுடன் பணி பணி புரிவீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை வியத்தகு அளவில் இருக்கும். ஆதாயம் பண வரவு கிடைக்கும். விருந்து விழாக்களில் கலந்து கொள்ளக் கூடிய சூழல் இருக்கும். குடும்பத்தில் வீண் குழப்பம் மட்டும் கொஞ்சம் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் புத்தி சாதுரியத்தால் எல்லாவற்றையுமே இன்னைக்கு நீங்கள் சமாளித்து வெற்றி காண்பீர்கள். உங்களுடைய வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்களை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். வாக்குவாதங்களை நீங்கள் மேற்கொண்டால் கொஞ்சம் கடினமான சூழ்நிலையை சந்திக்க வேண்டியிருக்கும்.
குடும்பத்தாரிடம் அன்பாக பேசுங்கள் பிள்ளைகளிடமும் அன்பாக பேசுங்கள். அக்கம்பக்கத்தினர் இடம் ரொம்ப அன்பாக நீங்கள் பேசவேண்டும். அக்கம்பக்கத்தினர் இடம் வீண் வாக்குவாதங்களை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். கூடுமானவரை இன்று ஆலயம் சென்று வாருங்கள். மனம் ஓரளவு அமைதி பெறும். பிறகு காரியங்களை மேற்கொள்ளுங்கள் காரியம் சிறப்பாகவே நடக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் விலகி செல்லும். இருந்தாலும் கொஞ்சம் கடினமாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். படித்த பாடத்தை ஒருமுறைக்கு இருமுறை எழுதிப் பாருங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.