Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் முதல் மீனம் வரை….. ”எந்த ராசிக்கு இன்று அதிஷ்டம்”..!!

மேஷ ராசி அன்பர்களே…!!! இன்று குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். இன்று உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

புகழ் கௌரவம் கூடும். இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடன் அனுசரித்து செல்லக்கூடும். விசேஷ நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளின் உடல் நிலையில் கவனம் இருக்கட்டும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.

சக மாணவர்களின் ஒத்துழைப்பும் இன்று இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பச்சை நிறம்

 

ரிஷப ராசி அன்பர்களே…!!!  இன்று குடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து செல்லும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள். இன்று மனத்தெளிவு இருக்கும். அதாவது குழப்பங்கள் நீங்கி காரியம் சிறப்பாக நடக்கும்.

எடுத்த காரியத்தையும் நீங்கள் திறமையாக செய்து முடிப்பீர்கள். வயிறு கோளாறு சம்பந்தமான சில பிரச்சனைகள் வரக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். பணவரவு சீராக இருக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும். தெய்வீக பக்தி இன்று அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல சிறப்பான முன்னேற்றம் இருக்கும். தடைகளும் விலகி செல்லும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் :  ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்

 

மிதுன ராசி அன்பர்களே…!! இன்று கனிவாகப் பேசி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்யக்கூடும். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்.

அமோகமான நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டியிருக்கும். அடுத்தவர் கூறும் கருத்துகளை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், அதில் உள்ள நல்லது கெட்டதை யோசித்து செய்வது நல்லது. அந்த  விவகாரங்களில் கவனமாக இருங்கள். இன்று மாணவர்கள் கொஞ்சம் கல்வியில் கூடுதல் உழைத்து படிப்பது நல்லது.

படித்ததை எழுதிப் பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்

கடக ராசி அன்பர்களே…!! இன்று புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவார்கள். உங்களால் மற்றவர்கள் பயன்படக்கூடும். பிரபலங்களால் ஆதாயம் அடையக்கூடும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிட்டும். சாதிக்கும் நாளாக இன்றைய நாள் இருக்கும். அதுமட்டுமில்லாமல் கடவுள் பக்தி அதிகரிக்கும்.

கொடுக்கல் வாங்கல், சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் இருக்கட்டும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகிச்செல்லும். கடன் விவகாரங்களில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் பொழுது ரொம்ப கவனமாக அனுப்புங்கள். இன்று குடும்பத்தில் ஓரளவு ஒற்றுமை மேலோங்கும் நாளாக இருக்கும். கணவன் மனைவியைப் பொறுத்தவரை எந்த பிரச்சனையும் இல்லை. தனவரவு கூட உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் எப்பொழுதுமே உங்களுக்கு சிறப்பை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பச்சை நிறம்

சிம்ம ராசி அன்பர்களே..!!  இன்று உங்களுடைய பலம் எது, பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்து கொள்வது நல்லது. வியாபாரத்தில் பற்று வரவு சுமாராக தான் இருக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாளாகவே இன்று இருக்கும். இன்று எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும்.

மாணவர்கள் கவனத்தைச் சிதறவிடாமல், மிகவும் நன்கு கவனித்து பாடங்களைப் படிப்பது சிறப்பு. சகமாணவர்கள் அனுசரித்து செல்வது நன்மையை கொடுக்கும். இன்று கணவன்-மனைவிக்கு இடையே கொஞ்சம் இடைவெளி இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். போதுமான வரை கொஞ்சம் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். தெய்வீக நம்பிக்கை உங்களை சிறப்பானதாக ஆக்கி கொடுக்கும்.

அதுமட்டுமில்லாமல் இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் :  6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்

கன்னி ராசி அன்பர்களே…!!  இன்று எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறி செல்வீர்கள். வீடு வாகன பராமரிப்பு செலவினங்கள் அதிகமாகும். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலமாக லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். எதிர்பாராத உதவிகள் கிட்டும். இன்று மன அமைதி இருக்கும். எதிலும் நல்ல பலன்கிடைக்கும். திட்டமிட்டு செயலாற்றுவதிலும், உறுதியான முடிவுகளை எடுப்பதிலும், உங்களுடைய காரியங்கள் அனைத்துமே நல்லபடியாகவே இன்று நடக்கும்.

உங்களுடைய வாக்கு வன்மையால் சில காரியங்களை சிறப்பாக செய்து முடித்து பாராட்டுகளையும் பெறுவீர்கள். இன்று எதிர்பாராத திடீர் செலவுகள் மட்டும் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். அடுத்தவர் கூறுவதை தவறாக புரிந்து கொண்டு பின்னர் வருத்தப்படும் சூழ்நிலை ஏற்படலாம். அந்த விஷயத்தில் ரொம்ப கவனமாக செயல்படுங்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். சக மாணவர்களின் ஒத்துழைப்பைபு இன்று கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்

 

 

துலாம் ராசி அன்பர்களே…!! இன்று பிள்ளைகளால் சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டி மகிழ்வீர்கள். இன்று உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றி பெறும் நாளாகவே இன்றைய நாள் இருக்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக பிரச்சனைகள் தீரும்.

தொடங்கிய வேலையை திட்டமிட்டபடி செய்ய முடியாமல், இழுபறியான சூழல் கொஞ்சம் இருக்கும். பார்த்துக்கொள்ளுங்கள், நிதானமாக செய்யுங்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் நீங்கள் கூறுவதை கேட்காமல் தங்கள் விருப்பப்படி எதையுமே செய்வார்கள். இன்று கணவன் மனைவிக்கிடையே சின்னதாக இடைவெளி இருக்கும். கூடுமானவரை எந்த பிரச்சினையையும் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். அக்கம்பக்கத்தினர் இடம் கொஞ்சம் அளவாகவே பழகுங்கள்.

இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் :  நீலம் மற்றும் வெள்ளை நிறம்

விருச்சிக ராசி அன்பர்களே…!!! இன்று தொட்டது துலங்கும் நாளாக இருக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். இன்று வியாபாரத்தில் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களை மதிக்க கூடும். நிம்மதி கிட்டும் நாளாகவே இன்றைய நாள் இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் இன்று எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மையை கொடுக்கும். மாணவர்கள் நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன் பாடத்தை படிப்பது சிறப்பு. மனக்கஷ்டம், பண கஷ்டம் இன்று ஓரளவு சரியாகும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை ரொம்ப சிறப்பாகவே இருக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே மட்டும் சின்னதாக பூசல்கள் வரக்கூடும். குடும்பத்தார் பேசுவதை நீங்கள் சரியான முறையில் கூர்ந்து கவனித்து, அதற்கு ஏற்றார்போல் பதில் கொடுங்கள்.

அப்பொழுது தான் வாக்குவாதங்களை நாம் தவிர்க்க முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்

தனுசு ராசி அன்பர்களே…!! இன்று கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாருக்காகவும் நீங்கள் சாட்சி கையெழுத்திட வேண்டாம். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். இன்று மாலை 5 மணிக்கு மேல் உங்களுக்கு சிறப்பான சூழ்நிலை கொஞ்சம் இருக்கும். அதாவது மனம் கொஞ்சம் அமைதியாக காணப்படும். இன்று தொழில் வியாபாரத்தில் லாபம் இருக்கும். ஏற்றுமதியும் ஓரளவு சிறப்பை கொடுக்கும். எதிர்பார்த்த நிதியுதவி கிடைப்பதில் காலதாமதம் இருக்கும்.

பழைய பாக்கி ஓரளவு வசூலாகும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். மேலும் அதிகாரிகளின் பாராட்டுதல்களும் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் செய்யக்கூடிய நேர்த்தியான வேலைகள் அனைவரையும் கவரும் விதமாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே எந்தவித வாக்குவாதங்களும் வேண்டாம். கூடுமானவரை இன்று பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது. முடிந்தால் இன்று ஆலயம் சென்று வாருங்கள் அது போதும். வாகனத்தில் செல்லும் பொழுது ரொம்ப மெதுவாக செல்ல வேண்டும். அதையும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள்.

மாணவர்கள் எந்தவித வாக்குவாதங்களும் சக மாணவரிடம் செய்யவேண்டாம். பொறுமையை கடைபிடியுங்கள். ஆசிரியர்களின் சொல்படி நடந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல், இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

மகர ராசி அன்பர்களே…!!!  உங்களின் நல்ல அணுகுமுறையை மற்றவர்களும் பின்பற்றக் கூடும். வியாபாரத்தில் இன்று போராடி தான் வியாபாரதில் இலாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாளாகவே இன்று இருக்கும். இன்று திறமையாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் பெறுவீர்கள்.

இன்று மாணவர்கள் கல்வியில் சிரமப்பட்டு முன்னேற்றம் காண வேண்டியிருக்கும், அதை மட்டும் பார்த்துக்கொள்ளுங்கள். மன தைரியமும் இன்று கூடும் நாளாக இருக்கும். தொட்டதில் ஓரளவு துளங்கும். நீங்கள் நினைத்த காரியமும் சிறப்பாகவே நடக்கும். கணவன்-மனைவிக்கிடையே ஓரளவு முன்னேற்றம் காணப்படும். அதுபோல மற்றவர்களிடம் பேசும் பொழுது எடுத்தோம், கவுத்தோம் என்று எதையும் பேச வேண்டாம். பொறுமையை கடைபிடியுங்கள். நிதானமாக செயல்படுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்

கும்ப ராசி அன்பர்களே….!!! இன்று உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். பயணங்களால் மகிழ்ச்சி இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியை கொடுக்கும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். இன்றைய நாள் இனிமையான நாளாக இருக்கும்.

இன்று தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைப்பதில் கொஞ்சம் தாமதமாகலாம். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் கொஞ்சம் ஏற்படலாம். இன்றையநாள் ஓரளவு சிறப்பாகவே இருக்கும். கணவன்-மனைவிக்கிடையே நெருக்கம் இருக்கும். குடும்பத்தில் கூட நல்ல ஒற்றுமை இருக்கும். இன்று மாணவர்களுக்கு சக மாணவர்களிடம் இருந்த தொந்தரவுகள் விலகிச்செல்லும்.

ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். அதே போல கல்வியில் நல்ல ஆர்வம் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும்  7

அதிர்ஷ்ட நிறம் :  நீலம் மற்றும் வெள்ளை நிறம்

மீன ராசி அன்பர்களே…!! இன்று கனிவாக பேசி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி பெருமைப்படுவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை நீங்கள் இன்று சந்திக்கக்கூடும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்யக்கூடும். உத்யோகத்தின் சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். அமோகமான நாளாகவே இன்றைய நாள் இருக்கும்.அதுமட்டுமில்லாமல் இன்று மனதைரியம் கூடும்.

எதிர்ப்புகள் விலகி செல்லும். எந்த சூழ்நிலையையும் சமாளிக்க கூடிய திறமை இன்று ஏற்படும். வீண் குழப்பம், காரியதடை கொஞ்சம் இருக்கும். அதில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். வாகனத்தில் செல்லும் பொழுது ரொம்ப கவனமாக செல்லுங்கள். பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். கவன தடுமாற்றம் ஏற்படலாம். பணவரவு பொருத்தவரை ஓரளவு சிறப்பாகவே இருக்கும். இருந்தாலும் செலவு கொஞ்சம் கூடும், பார்த்துக் கொள்ளுங்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் இருக்கும்.

கணவன் மனைவிக்கிடையே ஓரளவு நெருக்கம் இருக்கும். குடும்பத்தில் ஓரளவு ஒற்றுமை காணப்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான   அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் : ஊதா மற்றும் இளம் பச்சை நிறம்

Categories

Tech |