மேஷ ராசி அன்பர்களே….!! இன்று நீங்கள் ஆதாயத்தை விட விரயங்கள் கூடும் நாளாக இருக்கும். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது ரொம்ப சிறப்பு. சிரித்து பேசும் நண்பர்களால் சில சிக்கல்கள் ஏற்படக்கூடும். உடல் நலனில் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று கலைத்துறையினர் எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும், மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுப்பார்கள் பார்த்துக்கொள்ளுங்கள்.
எந்த ஒரு விஷயத்தையும் கவனமாகவே மேற்கொள்ளுங்கள். நீண்ட நாட்களாக, இழுபறியாக இருந்த சில காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். தொழிலில் ஓரளவு லாபம் இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகி மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். அதுமட்டுமில்லாமல் இன்று ஆன்மீக எண்ணம் உங்களுக்கு மேலோங்கும். ஆன்மீகதிற்காக சிறு தொகையையும் நீங்கள் செலவிட நேரிடும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை முழுமையாக மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்டமான எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்
ரிஷப ராசி அன்பர்களே….!!! இன்று உங்கள் எதிரிகளின் பலம் கூடும் நாளாக இருக்கும். லாபம் வருவதில் தடைகள் கொஞ்சம் ஏற்படலாம். வீடு மாற்றம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். இன்று குடும்பத்தில் கருத்துவேறுபாடு அவ்வப்போது வந்து செல்லும். தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறையும். இன்று மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சந்தேகங்கள் அதிகமாகவே இருக்கும். உடனுக்குடன் அவற்றை கேட்டு தெரிந்து கொள்வது சிறப்பு.பொருள் வரவு ஓரளவு சிறப்பாக இருக்கும். இன்று போதுமான வரை நீங்கள் பொறுமையை கையால்வது சிறப்பு.
முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். மனம் நிம்மதியாக காணப்படும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக நீங்கள் செயல்பட வேண்டும். மற்றவர்கள் பார்வையில் படும் படி நீங்கள் பணத்தை எண்ண வேண்டாம். இந்த விஷயத்தில் நீங்கள் ரொம்ப கவனமாக இருங்கள். தொழில் இன்று கொஞ்சம் மந்தமாகவே நடக்கும். தனவரவு கிடைப்பதில் காலதாமதம் பிடிக்கும். அதேபோல் வெளியூர் பயணங்களையும் மேற்கொள்வீர்கள். அந்தப் பயணம் ஓரளவு அலைச்சலை கொடுக்கக்கூடிய பயணமாக இருக்கும். கூடுமானவரை பொறுமையை மட்டும் நீங்கள் கையாண்டால் தான் சிறப்பான பலனை நீங்கள் பெற முடியும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று கட்டாயமாக சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். சிவபெருமான் வழிபாடு உங்களுக்கு சிறப்புமிக்க வழிபாடாகவே அமையும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்
மிதுனம் ராசி அன்பர்களே…!! இன்று நீங்கள் காரிய வெற்றிக்கு சிவபெருமான் வழிபாட்டை மேற்கொள்வது மிகவும் சிறப்பு. வருமானம் திருப்திகரமாக இருக்கும். பயணங்களால் பலன் உண்டாகும். விஐபிக்கள் வீடு தேடி வரக்கூடும். கடமையில் இருந்த தொய்வு அகலும். கல்யாண முயற்சி கைகூடும். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பேச்சின் இனிமை ,புத்திசாலித்தனம் இவற்றால் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும்.
சிலருக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். ஏற்றுமதி சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய நபர்கள் அறிமுகம் ஆவார்கள். இன்றைய நாள் வெற்றிபெறும் நாளாகவே இருக்கும். மனமும் மகிழ்ச்சியாக காணப்படும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். சமூகத்தில் இன்று உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும்.
இன்று மாணவர்கள் மட்டும் கல்வியில் கொஞ்சம் பின்தங்கிய நிலையை சந்திக்கக்கூடும். விளையாட்டுத் துறையில் ஆர்வம் அதிகரிப்பதால், கொஞ்சம் பாடத்தில் கவனத்தை செலுத்தி படியுங்கள் அது போதும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்
கடக ராசி அன்பர்களே…!! இன்று உங்கள் உத்தியோக முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். விரதம் வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். பழைய பாக்கிகளை வசூல் செய்து பரவச படுவீர்கள். கடன் சுமை குறைவதற்கு நண்பர்கள் வழிவகுத்து கொடுப்பார்கள். இன்று எடுத்த வேலைகளை மிக சரியாக செய்து நல்ல பெயர் எடுப்பீர்கள்.குடும்பத்தில் இருந்த இறுக்கம் நீங்கி, மனம் மகிழ்ச்சி அடையும் விதமாக சம்பவங்கள் நடக்கும்.
உறவினர் மூலம் தேவையான உதவியும் கிடைக்கும். வெளியூரில் இருந்து நல்ல செய்திகளும் வந்துசேரும். வேலை இல்லாத நண்பர்களுக்கு வேலை கிடைக்கக்கூடிய சூழல் உருவாகும்.இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும், ஒத்துழைப்பு இருக்கும்.சக மாணவர்களிடம் மட்டும் கொஞ்சம் நிதானமாக நடந்துகொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமுமே உங்களுக்கு சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்
சிம்ம ராசி அன்பர்களே…!! இன்று நீங்கள் சிவ பெருமான் வழிபாட்டை தொடங்கி இன்றைய காரியங்களைச் செய்யுங்கள், அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்க்கக் கூடும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் இன்று விரிவடையும். உயர் அதிகாரிகளால் நன்மை உண்டாகும்.இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பேச்சினால் மேல் அதிகாரிகளை கவர்ந்து விட கூடிய சூழல் இருக்கு.
உங்களுடைய உடலிலும் இன்று வசீகரத் தன்மை கூடும். காதலில் வயப்படக்கூடிய சூழல் இருக்கு. எதிர்பார்த்த உதவி உங்களுக்கு சரியான நேரத்திற்கு வந்து சேரும். பொருட்களை மட்டும் கவனமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள் அது போதும். சரியான பொருட்களை மட்டும் தேர்ந்தெடுத்து வாங்குங்கள். தேவை இல்லாத பொருட்களை வாங்கி செலவுகளை உருவாக்கிக் கொள்ள வேண்டாம்.
இன்று உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். கணவன்-மனைவிக்கிடையே அன்பும் இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்
கன்னி ராசி அன்பர்களே…!!! இன்று உங்கள் பணத்தேவை பூர்த்தியாகும் நாளாக இருக்கும். தொலைபேசி வழியில் அனுகூல செய்திகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சி பெறுவதற்கு அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளை கேட்பீர்கள். சுப செலவுகள் கொஞ்சம் உண்டாகும். இன்று பணவரவு தாராளமாகவே இருக்கும். எடுத்த காரியங்கள் எல்லாம் கைகூடும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். எதிர்ப்புகள் விலகி செல்லும்.
பயணம் மூலம் லாபம் கிடைக்க கூடும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும், அந்த நட்பின் மூலம் லாபமும் உண்டாகும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும், சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். இன்று எல்லா வகையிலுமே உங்களுக்கு நன்மை ஏற்படும். இன்றைய நாள் உங்களுக்கு செல்வச் செழிப்புமிக்க நாளாகவும் இருக்கும். இன்று மாணவர்கள் மட்டும் கல்வியில் விளையாட்டை ஓரம் கட்டிவிட்டு, பாடங்களை படிப்பது சிறப்பு.
கொஞ்சம் கூடுதலாக பாடங்களை மட்டும் கவனியுங்கள் அது போதும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் பச்சை நிறம்
துலாம் ராசி அன்பர்களே…!! இன்று உங்களுக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும் நாளாக இருக்கும். தனவரவு உங்களுக்கு திருப்திகரமாகவே இருக்கும். அக்கம் பக்கத்து வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். தொழில் ரீதியாக புதிய திட்டம் ஒன்றை தீட்டுவீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது மட்டும் எப்போதும் நல்லது. இன்று அரசியல் துறையை சேர்ந்தவர்களுக்கு வாக்கு வன்மையால் நல்ல சிறப்பான சூழல் இருக்கும்.
இன்று நண்பர்கள் மூலம் ஆதாயமும் கிடைக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வு வரவேண்டிய, பணம் எல்லாமே வந்து சேரும். எடுக்கும் முடிவுகள் நல்ல பலனைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். அதாவது நீங்கள் கொடுத்து வைத்திருந்த பணம் உங்களைத் தேடி இன்று வரக்கூடும். பழைய பாக்கிகளும் வசூலாகும். உங்களுடைய நிதி மேலாண்மை இன்று சிறப்பாகவே இருக்கும்.
இன்று மாணவர்கள் கல்வியில் மட்டும் கொஞ்சம் கவனமாக படியுங்கள், விளையாட்டில் ஆர்வம் செல்லும் பாடங்களை முழுமையாக புரிந்துகொண்டு, சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு அனைத்துவித காரியத்தையும் செய்யுங்கள். உங்களுடைய காரியங்கள் மிக சிறப்பாகவே நடக்கும்
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் வெள்ளை நிறம்
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று சந்தோச வாய்ப்புகளை சந்திக்கும் நாளாக இருக்கும். தனவரவு திருப்தி தரும் சூழ்நிலையில் இருக்கும். உங்களின் முன்னேற்றத்திற்கு மாற்று இனத்தவர்கள் ஒத்துழைப்பு செய்வார்கள். திருமண பேச்சுக்களால் நல்ல முடிவு கிடைக்கும். இன்று வீண் கவலை கொஞ்சம் இருக்கும். சேமிக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத சூழ்நிலை உருவாகும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் சுறுசுறுப்பு காணப்படும். மற்றவர்களை விட கூடுதலாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும்.
இன்று அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். இந்த வாய்ப்புகள் சரியான வாய்ப்புகளா என்று ஆராய்ந்து பின்னர் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அதுமட்டுமில்லாமல் இன்று வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். ஆன்மீக பயணம் செல்வீர்கள். ஆன்மீக சுற்றுலாக்கள் செல்லும் பொழுது கொஞ்சம் கவனமாகவே செல்லுங்கள். அது மட்டுமில்லாமல் இன்று சிறு தொகையை நீங்கள் தெய்வதற்காக செலவு செய்ய நேரிடும் அதையும் பார்த்துக் கொள்ளுங்கள்.
இன்று தன வரவு இருந்தாலும் செலவுக்கு பஞ்சம் இருக்காது. அதற்கு ஏற்றார் போல் நீங்கள் நடந்துக் கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுபோலவே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்
தனுசு ராசி அன்பர்களே..!! இன்று முன்னேற்றம் அதிகரிக்க சிவ பெருமானை மனதார வழிபடுங்கள் முக்கிய புள்ளிகள் இல்லம் தேடி வரக்கூடும். கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்ள முன்வருவீர்கள். இன்று எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும். ஆன்மீக பணிகளில் நாட்டம் செல்லும். பணவரவில் உங்களுக்கு நிறைவு இருந்தாலும் செலவு இன்றைக்கு கூடும். சரியான பொருட்களை மட்டும் தேர்ந்தெடுத்து வாங்குங்கள்.
அதுபோலவே உடல் ஆரோக்கியத்தில் மட்டும் இன்று கவனமாக இருங்கள். வயிற்று பிரச்சினைகள் போன்ற நோய்கள் வரக்கூடும். அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். தொழில் வியாபாரம் எதிர்பார்த்ததை விட சற்று நிதானமாக தான் நடக்கும். தனவரவு இருக்கும். ஆனால் செலவு இருக்கும், அதையும் கவனத்தில் கொள்ளுங்கள். இன்று குடும்பத்தில் ஒற்றுமைக்கு குறைவிருக்காது. கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். தெய்வீக பக்தி இன்று அதிகமாகவே காணப்படும்.
இன்று மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் செல்லும். நல்ல முன்னேற்றம் ஏற்படும். சக மாணவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமானை மனதார நினைத்து வழிபடுங்கள். நினைத்த காரியம் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 7 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் ஆரஞ்சு நிறம்
மகரம் ராசி அன்பர்களே..!! இன்று விரோதிகள் விலகிச்செல்லும் நாளாக இருக்கும். விரயங்கள் தவிர்க்க முடியாததாக அமையும். தொழில் ரீதியாக இன்று பயணங்கள் நீங்கள் செல்ல வேண்டியிருக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். இன்று பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதியதாக தொழில் ஆரம்பிப்பதற்கு ஏற்ற சூழலும் இன்று இருக்கும். அரசாங்க அனுகூலம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் இன்று நிலவும். அதேபோல் வெளியூரில் இருந்து நல்ல தகவல்கள் உங்களுக்கு வந்து சேரும்.
அயல்நாடு செல்வதற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்திகள் இல்லத்தில் வந்து சேரும். வேலையில்லாத நண்பர்களுக்கு வேலை கிடைக்கும். இன்று மனம் தைரியமாக காணப்படும். துணிச்சலுடன் சில காரியங்களை மேற்கொள்வீர்கள். இன்று கணவன் மனைவி இடையே ஒற்றுமை இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனமும் அமைதியாக காணப்படும்.
சக மாணவரின் ஒத்துழைப்பும் இருக்கும். கல்வியில் இருந்த தடை விலகி செல்லும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்
கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று மகிழ்ச்சி பெருக சிவ பெருமானை மனதார வழிபட வேண்டிய நாளாக இருக்கும். தொலைபேசி மூலம் பொன்னான தகவல்கள் வந்துசேரும். பொதுவாழ்வில் மதிப்பும் மரியாதையும் உயரும். வெளிநாட்டு முயற்சி கைகூடும். இன்று மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் மறைந்து மகிழ்ச்சியான சூழ்நிலை இன்று நிலவும். குடும்பத்தில் கலகலப்பு காணப்படும்.
வாழ்க்கை துணை உங்களை அனுசரித்துச் செல்ல கூடும். அக்கம்பக்கத்தில் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். மனதில் இருந்த கவலைகள் அனைத்தும் நீங்கும். அதுமட்டுமில்லாமல் இன்று உடலில் வசீகர தன்மை கூடும். காதலில் வயப்பட கூடிய சூழல் இருக்கும். திருமண முயற்சிகள் வெற்றிகரமாக நடக்கும். கணவன் மனைவிக்கு இடையே அந்நியோன்யம் பிறக்கும். இன்று மாணவர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும்.
சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். சக மாணவரின் ஒத்துழைப்பும் இன்று இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்தும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று துணிவும் தன்னம்பிக்கையும் கூடும் நாளாக இருக்கும். தொழில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடி நடைபெறும். கொடுக்கல் வாங்கல்களில் ஏற்பட்ட குறைபாடுகள் அகலும். இன்று உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் எதிர்காலம் கருதி சில முக்கிய முடிவுகளை இன்று எடுக்ககக்கூடும். வழக்குகளில் நிதானமாக போக்கு காணப்படும். எதிர்பாராமல் நடக்கும் சில சம்பவங்களால் நன்மை உண்டாகும். மன குழப்பம் நீங்கும்.
இன்று எடுக்கக்கூடிய முடிவுகள் தெளிவாக இருக்கும். உங்களுடைய சிந்தனை திறன் இன்று அதிகரிக்கும். உங்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமைபடக்கூடிய சூழல் இருக்கும், அதை பார்த்துக் கொள்ளுங்கள், உங்கள் உடலில் இன்று வசீகரத் தன்மை கூடும். காதலில் வயப்பட கூடிய சூழல் இருக்கும். திருமண முயற்சி சிறப்பாக கைகூடும். இன்று கணவன் மனைவிக்கு இடையே அன்னியோன்யம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். ஒற்றுமை இருக்கும். சகோதரர் வகையில் கூட உங்களுக்கு ஆதாயமும் இருக்கும்.
இன்று மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தை பெறக்கூடும். கல்வியில் ஆர்வம் மிகுந்து இருக்கும். அது மட்டுமில்லாமல் ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பு இன்று கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்