இந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் நடிகராக மட்டுமின்றி இயக்குனர், தயாரிப்பாளர், நடன ஆசிரியர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்டவர். நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இவர் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு கமலின் 234-வது திரைப்படத்தில் 35 வருடங்களுக்குப் பிறகு மணிரத்தினம் இயக்குகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய 68-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் பல்வேறு பிரபலங்களும் கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். அந்த வகையில் நடிகை குஷ்பூ கமல்ஹாசனின் புகைப்படங்களை தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் என்னுடைய நெருங்கிய நண்பர் அவர்களே உங்களுடைய பிறந்தநாளுக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள். நீங்கள் நல்ல உடல் நலமும் ஆரோக்கியமும் பெற்று பல ஆண்டுகளுக்கு மகிழ்ச்சியாக வாழ வேண்டும். உங்கள் வாழ்க்கையில் என்றும் வெற்றிகளை பெறுவதற்கு என்னுடைய அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஐ லவ் யூ கமல் சார் என்று பதிவிட்டுள்ளார்.
My dearest friend, sending you tons & tons of best wishes for good health, happiness and loads of success as you celebrate your birthday today. I, celebrate our friendship of respect & love. Love you Sir. 😍❤️🥰💖🌟🔥#HappyBirthdayKamalHaasan#Ulaganayagan @ikamalhaasan pic.twitter.com/Ua4IlSvfRG
— KhushbuSundar (@khushsundar) November 6, 2022
பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் இயக்குனர் சங்கர் கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தியன் 2 படத்தில் இருந்து ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் பன்முக திறமைகளை கொண்ட நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்ற பதிவிட்டுள்ளார்.
Wishing our treasure, the multi-faceted talent @ikamalhaasan sir a very Happy Birthday! pic.twitter.com/Ra8Hze0amn
— Shankar Shanmugham (@shankarshanmugh) November 6, 2022
மேலும் திமுக கட்சியின் தலைவரும் தமிழகத்தின் முதல்வருமான மு.க ஸ்டாலின் அவர்கள் நடிகர் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் தீரா கலைதாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான அன்பு தோழர் கமல்ஹாசன் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலைத்தாய் பெற்றெடுத்த பெரும் கலைஞனே வாழிய நின் கலைத்திறம் என்று பதிவிட்டுள்ளார்.
தீராக் கலைத்தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும், @maiamofficial கட்சியின் தலைவருமான அன்புத்தோழர் திரு. @ikamalhaasan அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்.
கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே வாழிய நின் கலைத்திறம்!
— M.K.Stalin (@mkstalin) November 7, 2022