கொரோனா பெருந்தொற்று பரவியதையடுத்து தமிழகம் முழுவதும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. இணையம் வழியாக கல்வி சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கல்வி நிலையங்கள் திறப்பு குறித்த உத்தரவை தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில், திங்கட்கிழமை டிசம்பர் 7ஆம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை, இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் மட்டும் கல்லூரிக்கு வரலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும் கல்லூரிக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் ஆகியோருக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதில் மாணவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.