பிப்ரவரி-1 முதல் EMV அல்லாத ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து இனி பணம் எடுக்க முடியாது என்று பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்கும் விதிமுறைகளை மாற்றி அமைத்துள்ளது. அதன்படி பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் EMV அல்லாத ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து இனி பணம் எடுக்க முடியாது என்று அறிவித்துள்ளது. இந்த நடைமுறை பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேலும் இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்க்க வாடிக்கையாளர்கள் PNB One என்ற டிஜிட்டல் முறையை பயன்படுத்த கேட்டுக்கொண்டுள்ளது.