ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகிக்கொள்வதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வூட் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிடுவதற்காக இந்த முடிவை தான் எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் கிளப் தங்களது வீரர்களின் மனநலத்தை ஆரோக்கியமாக பேணும் விதமாக வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தி வருகிறது.
அந்த வகையில் இந்தியாவுக்கெதிரான முதல் இரண்டு போட்டிகளில் இருந்தும் ஓய்வளிக்கப்பட்டிருந்த மார்க் வூட் வரும் 24ஆம் தேதி ஆரம்பமாகவுள்ள மூன்றாவது போட்டிக்காக மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.
ஐ.பி.எல். போட்டியில் தேர்வு செய்யப்பட்டால் கைக் குழந்தையாக இருக்கும் தனது மகனைப் பிரிந்து பலநாட்கள் இருக்க நேரிடும் என்ற காரணத்தாலும், இதன் பின்னர் உலக கோப்பை போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டிய தேவையுள்ளதால் இந்த ஓய்வு மிகவும் அவசியம் என்றும், இதனாலேயே போட்டிகளில் இருந்து விலகும் முடிவை தான் எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.