2021 ஜனவரி முதல் எல்இடி டிவி, வாஷிங் மிஷின் போன்ற பொருட்களுக்கு 10% விலை உயரும் என்று கூறப்பட்டுள்ளது.
மக்கள் தங்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர். வாங்கும் பொருட்களை கடையிலிருந்தே வாகனத்தின் மூலம் கொண்டு வந்து விடுகிறார்கள். ஆனால் அதற்கு கட்டணம் வசூக்க மாட்டார்கள். தற்போது கொரோனா பரவல் காரணமாக விற்பனையில் மந்தம் ஏற்பட்டது. இந்நிலையில் 2021 ஜனவரி மாதம் முதல் எல்இடி டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்டவற்றின் விலை 10 சதவீதம் வரை உயர்கிறது.
முக்கிய உள்ளீட்டு பொருட்களான காப்பர், அலுமினியம், ஸ்டீல் பொருள் போன்றவற்றின் விலை அதிகரிப்பும், இதனை கொண்டு வரும் போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பும் இந்த விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும் சர்வதேச அளவில் டிவி பேனல்களின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது இவற்றின் காரணமாகவே கருதப்படுகின்றது.