சுவிட்சர்லாந்தில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து மத்திய குழு முடிவு செய்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் தொற்று நோய் குறைவாக உள்ள பகுதிகளில் வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் சில கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய குழு முடிவெடுத்துள்ளது. அதன்படி, மார்ச் 1ஆம் தேதி முதல் வெளியில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளில் 15 பேர் வரை பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 18 வயது வரையிலான இளைஞர்கள் விளையாட்டு மற்றும் கலாச்சார நடவடிக்கைகளைத் தொடங்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடைகள், அருங்காட்சியங்கள், நூலகங்கள் ஆகியனவும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரிங்ஸ்,டென்னிஸ் மற்றும் கால்பந்து மைதானங்கள் திறக்கலாம்.ஆனால், 5 பேர் கொண்ட குழுக்கள் மட்டுமே விளையாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் இடங்களில் வரும் பொதுமக்கள் கட்டாயமாக முக கவசமும், தனிமனித இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை தவிர இருக்கும் ஹோட்டல்கள் போன்றவற்றிற்கு அடுத்த மாதம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.