இனி ஆதார் அட்டை தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் வாரத்தின் 7 நாட்களும் பதில் அளிக்கப்படும் என்று UIDAI அறிவித்துள்ளது.
ஆதார் அட்டை என்பது அனைவருக்கும் முக்கிய ஆவணமாகும். அனைத்து தேவைகளுக்கும் ஆதார் அட்டை ஒரு ஆதாரமாக பயன்படுகிறது. இதில் நம்முடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி ஆகியவை அனைத்தும் சரியாக குறிப்பிட்டிருக்க வேண்டும், அப்படி இல்லாத பட்சத்தில் மற்ற வேண்டும். இந்நிலையில் ஆதார் அட்டை பயனர்களுக்கு மீண்டும் ஒரு முக்கிய அறிவிப்பை UIDAI வெளியிட்டுள்ளது.
அதாவது, ஆதார் அட்டை தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் இனி திங்கள் முதல் ஞாயிறு வரை வாரத்தின் ஏழு நாட்களுக்கும் பதில் அளிக்கப்படும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அறிவித்துள்ளது. அதன்படி அனைத்து சிக்கல்களுக்கும் திங்கள் முதல் சனி வரை காலை 7 – இரவு 11, ஞாயிறன்று காலை 8-மாலை 5 மணி வரை 1947 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். இதில் 12 மொழிகளில் உங்களுக்கு தேவையான உதவி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.