Categories
தேசிய செய்திகள்

இனிமேல், இப்படி சிலிண்டர்களை முன்பதிவு செய்தால் – 50 ரூபாய் கிடைக்கும்.!!

வழக்கமாக  நாம் சிலிண்டர்களை முன்பதிவு செய்யவேண்டுமெனில் எண்ணெய் நிறுவனம் கொடுத்துள்ள  இலவச நம்பரை  மூலம் முன்பதிவு செய்வோம். ஆனால் தற்போது அமேசான் நிறுவனம் சிலிண்டர்களை தங்களது மொபைல் செயலி மூலம் பதியும் வசதியைக் கொண்டுவந்துள்ளது.

இதில் அமேசான் பே (amazon pay) மூலம் முதன்முறையாக கட்டணம் செலுத்தும் நுகர்வோருக்கு 50 ரூபாய் கூடுதல் கேஷ்பேக் வழங்கவுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கு அமேசான் செயலி அல்லது அதன் இணையதளப்பக்கத்தில் எல்.பி.ஜி(LPG ) சிலிண்டர் முன்பதிவு எனும் ஆப்ஷனை கிளிக் செய்யது. அதில் உங்களது டீலர் மற்றும் மொபைல் எண்ணைக் கொடுக்க வேண்டும். இது உங்களை பணம் செலுத்தும் பக்கத்திற்கு எடுத்துச் செல்லும். இதில் அமேசான் பே மூலம் நீங்கள் பணத்தினைச் செலுத்த வேண்டும்.

இவ்வாறு சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கும் அமேசான் பே (amazon pay) மூலம் முதல் முறையாக பணம் செலுத்தும் நுகர்வோருக்கு 50 ரூபாய் வழங்கப்படும் என்று இந்தியன் ஆயில் தெரிவித்துள்ளது. இந்த கேஷ்பேக் சில காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்று நிறுவனம் கூறியது. அமேசான் பேய்மெண்ட் வசதியை ஊக்குவிப்பதற்காக இச்சலுகையை வழங்கி வருகிறது.

Categories

Tech |