நாடு முழுதும் உள்ள தனியார் தொலைக்காட்சிகளுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, நாடு முழுவதும் உள்ள தனியார் சேனல்கள் தினம் தோறும் 30 நிமிடங்கள் பொது நலன் குறித்த விஷயங்களை ஒளிபரப்ப வேண்டும்.
அதன்படி அறிவியல், தொழில்நுட்பம், கலாச்சார பாரம்பரியம், தேசிய ஒருமைப்பாடு, சுற்றுச்சூழல், சமுதாயத்தின் நலிந்த பிரிவை சேர்ந்த மக்களுக்கு அதிகாரம் அளித்தல், கல்வியறிவு பரவுதல், கல்வி மற்றும் சுகாதாரம் சார்ந்த 8 முக்கிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண்டும். மேலும் இந்த 8 நிகழ்ச்சிகளை கட்டாயமாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் ஒளிபரப்ப வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.