இமயமலையில் படர்ந்திருக்கும் பனியை போட்டோ எடுத்து தனது ஊடகத்தில் பதிவிட் நாசாவின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடும். நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், விண்வெளியில் இருந்து இமய மலையினை புகைப்படம் எடுத்து பகிர்ந்திருந்தது. அந்த புகைப்படத்தில், இமயத்தின் மீது பனிப்போர்வை போற்றி இருப்பது போல அவ்வளவு அழகாக காட்சி அளித்தது. இந்த புகைப்படம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இமயமலையில் படர்ந்திருக்கும் பணியை லாங் எக்ஸ்போஷர் முறையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணிபுரிந்து வந்த விஞ்ஞானி ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார். உலகின் மிகப்பெரிய மலை உச்சியாக கருதப்படும் இமயம் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்திய – ஐரோப்பிய டெக்ட்டானிக் பிளேட்களின் கடுமையான மோதலின்போது உருவானதாக கருதப்படுகிறது. இந்தப் புகைப்படத்தில் ஒளிரும் மிளிரும் நகரங்களான புதுடெல்லி லாகூர் போன்றவை இடம்பெற்றிருக்கின்றது. இந்த புகைப்படம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 12 லைக்குகளை பெற்று உள்ளது. இது ஒரு அற்புதமான மற்றும் மிகவும் அழகான புகைப்படம் என்று பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.