தேனி மாவட்டத்தில் 6ஆம் வகுப்பு சேர வரும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அவர்களது சம்பளத்திலிருந்து உதவி தொகை வழங்கியது அனைவரிடையே பாராட்டை பெற்றுள்ளது.
தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 500க்கும் மாணவர்கள் படித்து வருகின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கினால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் இருந்துள்ளனர். இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளில் மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து காமயகவுண்டன்பட்டியில் உள்ள பள்ளியில் சேர்க்கையை அதிகப்படுத்தும் விதமாக மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் வீரமணி தலைமையில் ஆசிரியர்கள் ஷபி அகமது, மாதவன், ராஜா, ராதிகா ஆகியோரின் சம்பளத்திலிருந்து 6ஆம் வகுப்பிற்கு சேர வரும் மாணவர்களின் பெற்றோருக்கு 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கியுள்ளனர். மேலும் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மாணவர்களின் குடும்பத்தினருக்கு இந்த தொகை உதவியாக இருக்கும் என ஆசிரியர்கள் தரப்பில் கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து ஆசிரியர்களின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.