Categories
தேசிய செய்திகள்

மணமகளுக்கு கொரோனா… இருந்தும் நடைபெற்ற திருமணம்… எப்படி தெரியுமா..?

ராஜஸ்தானில் மணப்பெண்ணிற்குக் கொரோனா தொற்று உறுதியானதால் பாதுகாப்பு உடை அணிந்து ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஷாபாத் நகரில் பரா பகுதியில் ஜோடி ஒன்று திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தது. முன்னதாக மணமக்களுக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் வெளியானதில் மணமகளுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. எனினும் திருமணம் செய்து கொள்வதில் இருவரும் உறுதியாக இருந்தனர். மணமக்கள் இருவரும் தடுப்புக்கான தனிநபர் பாதுகாப்பு உடை அணிந்து கொண்டு, இருவரும் சடங்குகளை முறையாக பின்பற்றி திருமணம் செய்து கொண்டனர்.

அவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த நபரும் தனிநபர் பாதுகாப்பு உடை அணிந்திருந்தனர். இந்நிகழ்ச்சியின் மணமகன் பாரம்பரிய தலைப்பாகை மற்றும் கையுறைகளை அணிந்து கொண்டார். அதேபோல் மணமகளும் முகக்கவசம் கையுறை அணிந்த படி காணப்பட்டார். பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து இந்த திருமணம் நடைபெற்றது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

Categories

Tech |