Categories
தேசிய செய்திகள்

புகுந்த வீட்டிலிருந்து “பெண்ணை வெளியேற்ற முடியாது”… உச்சநீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு..!!

திருமணமான பெண்களுக்கு புகுந்த வீடும் சொந்தம், என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருமணமாகி மணமகனின் வீட்டிற்கு செல்லும் பெண்ணை எந்த ஒரு காரணமும் இன்றி அந்த வீட்டிற்கு உரிமை இல்லாதவராக இருந்த போதும் அங்கிருந்து அவரை வெளியேற்ற முடியாது. என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் திருமணமான பெண்கள் நிம்மதியாக உள்ளனர். கர்நாடக மாநிலம், வடக்கு பெங்களூரில் வசிக்கும் ஒரு மூத்த குடிமக்கள் தனது மகனின் மனைவி தங்களுக்கு சொந்தமான வீட்டில் குடியிருந்து வருவதாகவும், அவரை அந்த வீட்டை காலி செய்யச் சொல்லி வற்புறுத்தியும் தொடர்ந்து சம்மதிக்காமல் இருப்பதாக கூறினர்.

எனவே அந்த வீட்டை தங்களது மருமகள் காலி செய்து தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். இந்த வழக்கை மூத்த குடிமக்களின் உரிமைகள் அடிப்படையில் அந்த வயதான தம்பதியினர் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் பெண்களுக்கு சட்டரீதியிலான சுதந்திரம் பாதுகாப்பு வேண்டும். ஒரு பெண் திருமணம் செய்த பின்னர் அவருக்கு சொந்த வீட்டில் உரிமை உள்ளது போல், புகுந்த வீட்டிலும் உரிமை உள்ளது.

அந்த வீட்டிற்கு அவர் உரிமை கோர முடியா விட்டாலும் அந்த வீட்டில் இருந்தவரை சட்டரீதியாக வெளியேற்ற முடியாது. இது இந்திய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே அவரை வீட்டைவிட்டு காலி செய்யச் சொல்ல சட்டரீதியில் யாருக்கும் அதிகாரம் கிடையாது என உத்தரவிட்டது. இந்த உத்தரவு மூலம் பெண்களுக்கு உரிய சட்ட பாதுகாப்பை உறுதி செய்ததே திருமணமான பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைத்துள்ளது. இதனால் பெண்கள் அனைவரும் இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

Categories

Tech |