Categories
மாநில செய்திகள்

லோக்கல் சேனல் முதல்…. நேஷனல் சேனல் வரை…. விஜய் சொன்னதை சூர்யா செஞ்சிட்டார் …!!

நீட் தற்கொலைக்கு எதிராக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்தை அடுத்து அடுத்து #TNStandWithSuriya  என்ற ஹேஷ்டாக் சூர்யாவுக்கு ஆதரவாக ட்ரெண்டாகியது.

நாடு முழுவதும் நேற்று முன்தினம் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடந்து முடிந்துள்ளது. நீட் தேர்வு நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து தற்போது வரை அதன் மீது விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்திலும் நேற்று முன்தினம் நடந்த நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருந்த 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.  நேற்று நடந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரிலும், நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும்  விவகாரம் எதிரொலித்தது .

அதே போல நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை கொண்ட நிகழ்வு குறித்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கை பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. கொரோனா காரணமாக நீதிமன்றங்கள் காணொலி காட்சி வாயிலாக நடைபெறுகின்றது என்பதையெல்லாம் சுட்டிக்காட்டி சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி பாலசுப்பிரமணியன் தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதே போல நடிகர் சூர்யாவின் கருத்துக்கு ஆதரவாகவும் ஓய்வு பெற்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கடிதம் எழுதிவருகின்றனர். நடிகர் சூர்யா மீது எந்த விதமான நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் பதிவு செய்யக் கூடாது என அந்த கடிதத்தில் கூறியுள்ளனர். இதனிடையே #TNStandWithSuriya  என்ற ஹேஷ்டாக் இந்தியளவில் ட்ரெண்டாகியது அதே போல #KeralaStandWithSuriya  #நீட்என்ற_மனுநீதிதேர்வு போன்ற ஹேஷ்டாக்குகளும் ட்ரெண்டாகி பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வந்தனர்.

இதில் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு… கத்தி படத்தில் நடிகர் விஜய் விவசாயிகள் பிரச்சினை பேசும்போது சொன்ன வசனங்களை இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். அதாவது இனிமேல் லோக்கல் மீடியாவில் இருந்து நேஷனல் மீடியா வரை இந்த விஷயங்களை பேசுவார்கள் என்று அவர் சொல்ல… சூர்யாவின் கருத்துக்களை பல ஊடகங்கள் வெளியிட்ட வீடியோ காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோ டுவிட்டரில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |