2021 ஆம் ஆண்டின் முதல் 42 நாட்களில் மட்டும் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.3.65 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ3.96 அதிகரித்துள்ளது.
நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரிப்பதும் பிறகு குறைவதுமாக இருப்பது வழக்கம். பெட்ரோல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 86.53க்கும், டீசல் 79.23 க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் 2021 ஆம் ஆண்டின் முதல் 42 நாட்களில் மட்டும் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.3.65 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ3.96 அதிகரித்துள்ளது. மத்திய அரசுக்கு வருமானம் தேவை என்பதால் பெட்ரோல் விலை உயர்த்தப்படுவதாக பாஜகவினர் கூறியது குறிப்பிடத்தக்கது.