கொரோனா பெருந்தொற்று பரவியதை அடுத்து நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட பின்னர் படிப்படியாக தளர்வுகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. தற்போதைய நிலையில் நாடு முழுவதும் பொதுமுடக்க தளர்வுகளே இருந்து வருகின்றன. இதில் ஊரடங்கு காலத்தில் முடக்கப்பட்ட பல விஷயங்களுக்கு மத்திய – மாநில அரசுகள் அனுமதி வழங்கிஉள்ளது. குறிப்பாக 7 – 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் தற்போது திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் இன்று முதல் திரையரங்கம் திறக்கப்படுகின்றன. கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட 1,050 திரையரங்குகள் இன்று திறக்கின்றது. திரையரங்கில் அரசு விதிமுறைகளான 50 சதவீத இருக்கைகள், சானிடைசர் மூலம் சுத்தப்படுத்துவது உள்ளிட்டவை நிச்சயம் கடைபிடிக்கப்படும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். புதிய படங்கள் ஏதும் தற்சமயம் இல்லை என்பதால் ரஜினி நடித்த சிவாஜி, கமலின் தசாவதாரம் உள்ளிட்ட படங்கள் மீண்டும் திரையிடப்பட உள்ளன.