Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் இன்று முதல் – மாணவர்களை அறிவிப்பு ….!!

பள்ளி மாணவர்கள் அரசு தேர்வை  எழுதி, அதன் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது வழக்கம். பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தங்களது இறுதி ஆண்டு தேர்வு தேர்ச்சி பெற்று அதனை பதிவு செய்கின்றனர். அதேபோல கல்லூரி செல்லும் மாணவர்களும் அடுத்தடுத்து அதற்கான பதிவுகளை செய்துவருகின்றனர். வேலைவாய்ப்பு உறுதி செய்ய மாணவர்கள் இந்தப் பதிவை தொடர்ச்சியாக செய்து வருகின்றன.

இந்த நிலையில் தற்போது வேலைவாய்ப்பு பதிவு குறித்தான ஒரு அறிவிப்பு மாணவர்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பதிவு இன்று முதல் நவம்பர் 6ஆம் தேதி வரை நடைபெறும் என வேலைவாய்ப்பு துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் அவரவர் படித்த பள்ளியிலேயே ஆன்லைன் வழியாக பதிவு செய்து கொள்ளலாம். வேலைவாய்ப்பில் பதிவு செய்ய ஆதார் அட்டை, பான் கார்டு, குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை போன்றவற்றில் ஏதேனும் ஒன்று கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |