உதகை – மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை இன்று முதல் மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட உதகை – மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை இன்று முதல் மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. குன்னூர் – மேட்டுப்பாளையம் இடையே ஆடர்லி பகுதியில் விழுந்த மண் சரிவை அகற்றும் பணி நடந்ததால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. தற்போது தண்டவாளம் சீரமைக்கப்பட்டு ரயில் வெள்ளோட்டம் விடப்பட்டதையடுத்து இன்று முதல் மலை ரயில் சேவை இயங்கும் என தெரிவித்துள்ளது.