நாளை முதல் புதுவை மக்களிடம் வங்கிக்கணக்கில் ரூ.2000 செலுத்தப்படும் என்று முதல்வர் நாரயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் பழனிசாமி புதுச்சேரி மாநிலத்திற்கான மூன்று மாதச் செலவுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சுமார் 2,042 கோடி ரூபாய் அளவிலான பட்ஜெட்டை தாக்கல் செய்யப்பட்டது.
இதில் பேசிய புதுவை முதல்வர், 995 கோடி கொரோனா தடுப்பு நிதியாக கேட்கப்பட்டுள்ளது. நாளைமுதல் கொரோனா நிவாரண நிதி ரூ.2,000 வழங்கப்படும். ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ 2,000 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.