Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நாளை முதல்…. குடிக்க மட்டும் தான் தண்ணீர்…. விவசாயத்திற்கு அல்ல…. மேட்டூர் நீர் திறப்பு நிறுத்த வாய்ப்பு…!!

டெல்டா மாவட்டங்களில் பாசனத் தேவை குறைந்துள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நாளை முதல் நிறுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ம் தேதி முதல் ஜனவரி 28ம் தேதி வரை முற்போக்கு சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு போதிய நீர் இல்லாத காரணத்தினால் ஆகஸ்ட் 13-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட போதிலும் சம்பா தாளடி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

தீவிரமாக ஈடுபட்டிருந்த 263 நாட்களில் 150 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது அறுவடை வருவதால் நீர் தேவை குறைந்து வருகிறது. இதனால் நாளை முதல் மேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு நிறுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. குடிநீர் தேவைக்காக மட்டும் 1,100 கனஅடி நீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இன்றைய அணை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 107 அடியாகவும் நீர் திறப்பு 2,000 கன அடியாகவும் உள்ளது.

Categories

Tech |