விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில், கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கு மணிவிழா நடத்தினர். அதில் பேசிய விசிக பெண் நிர்வாகி ஒருவர், தலைவர் வந்தாலே ஒருங்கிணைந்து விடுவார்கள். ஆனால் மகளிர் அணியை ஒருங்கிணைக்கிறது நான் இன்னும் 20 வருஷம் ஒருங்கிணைக்கனும் போல, அவ்வளவு சிரமமாக இருக்கிறது.
அதற்கு பெரும் தடை மாவட்ட நிர்வாகம் தான். மாவட்ட நிர்வாகம் பெண்களை எவ்வளவு கேவலமாக திட்டிட்டு இருக்காங்க. அவ்ளோ கேவலமா திட்டி இருக்காங்க. நான் பேசுறது ரெக்கார்ட் பண்ணி வச்சிருக்கேன், அதை எல்லாம் நான் காட்டுறேன். ஆண் சமூகம் இன்னும் திருந்தவில்லை, ஆண் சமூகம் திருந்த வேண்டும். சனாதனத்தை எதிர்க்கின்றோம், இந்த கட்சிக்குள் சனாதனம் இருக்கின்றது.
டாப் டூ பாட்டம் வரை இந்த கட்சிக்குள் சனாதனம் இருக்கின்றது. அவ்வளவு சாதாரணமாக இவர்களை ஒருங்கிணைக்க விடவில்லை. மகளிர் விடுதலை எனக்கென்ன என நினைக்கின்றார்கள். 20 ஆண்டுகளாக நான் இதே வேலையை தான் செய்து கொண்டிருக்கிறேன். நான் அலுவலகத்தில் இருந்த போது கூட இதே வேலையை தான் செய்து கொண்டிருந்தேன். ஆனால் இந்த விழா மட்டும் எனக்கு மிகப்பெரிய பாடங்களை கற்றுக் கொடுத்திருக்கிறது. ஏனென்றால் பொருளாதாரம் மிக முக்கியம். பெண்களிடம் பொருளாதாரம் அறவே இல்லை.
பெரியார் இயக்கம், பெரியார் திராவிட கழகம், எப்படி அந்த தலைவரை தாண்டி அடுத்த தலைமுறைக்கும் அது ஒரு வழிகாட்டியாக இருக்கிறதோ, அது போன்று நம்முடைய நம் தலைவரின் கருத்துக்களும், நம்முடைய தலைவரின் முன்னெடுப்புகளும், நம்முடைய தலைவரின் சாதனைகளும் மக்களை காப்பாற்ற வேண்டும்.
சொல்லுவாங்க… அவர் இருக்கிறார் என்ற ஒன்றே போதும், நம்முடைய பாதுகாப்பிற்கு… தலைவர் அவர்கள் இந்த சனாதனவாதிகள் நான்கு வர்ண வேதங்களுக்கு எதிராக அடங்கமறு, அத்துமீறு, திமிறி ஏழு, திருப்பி அடி என்று அடித்துக் கொண்டிருக்கிறார் என தெரிவித்தார்.