கோவை மாவட்டம் காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் “நம்ம ஊரு சந்தை” என்ற பெயரில் பாரம்பரிய அரிசிகள் மற்றும் மூலிகைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டன. இதில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை பாரம்பரிய அரிசிவகைகள், சிறுதானியங்கள், மரச்செக்கு எண்ணெய் வகைகள், நாட்டுச் சர்க்கரை, பனங்கருப்பட்டி, கற்கண்டு, மளிகைப் பொருட்கள், காய்கறிகள், கீரைகள், பழங்கள், நாட்டுக் கோழி மற்றும் வாத்து முட்டைகள், குழந்தைகளுக்கான உணவு வகைகள், மரபு இனிப்பு வகைகள், முறுக்கு வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும் மூலிகை தேநீர் பொடி, ஊறுகாய் வகைகள், வீட்டு வைத்திய மூலிகைப் பொடி வகைகள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான உள்ளாடைகள், அணையாடைகள், உடல் சுத்தப்பொடிகள், வெட்டி வேறுபொருட்கள், சுத்தப்படுத்திகள், தேன் மெழுகில் செய்த சோப்புகள், மருந்துப்பொருள்கள், உடல் பொலிவு பொருட்கள் ,மண்பாண்டப் பொருட்கள், மர விளையாட்டுப் பொருட்கள், மூங்கிலால் செய்யப்பட்ட பொருட்கள் என இன்னும் ஏராளமான இயற்கைக்கு நெருக்கமான அனைத்து பொருட்களும் நம்ம ஊரு சந்தையில் பொதுமக்கள் வாங்கி மகிழ்ந்தனர். முற்றிலும் பிளாஸ்டிக் இல்லா சந்தை என்பதால் பொருட்கள் வாங்குவதற்குத் துணிப்பையையும் மக்கள்துணி பைகளைகொண்டு வந்துள்ளனர்.