மாம்பழத்தின் நன்மைகள்
ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த மாம்பழம் புற்றுநோய் வராமல் எதிர்த்து போராடுகிறது.
முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் போக்க சிறந்த மருந்தாகவும் விளங்கும்.
விட்டமின் ஏ மாம்பழத்தில் அதிகம் உள்ளதால் கண் பார்வையை ஆரோக்கியமாகவும் தெளிவாகவும் மாற்றும்.
உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் குறைத்து ரத்த அழுத்தம், இதய நோய் இவைகளில் இருந்து பாதுகாப்பு கொடுக்கும்.
மாம்பழம் இனிப்பாக இருந்தாலும் இதனை சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள முடியும்.
மாம்பழம் சாப்பிடுவதால் உடலில் இருக்கும் வெப்பத்தைப் போக்கி முகப்பரு, சரும பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் அண்டாமல் காக்கும்.
பச்சை மாங்காய் உண்பதால் சளி மற்றும் இருமல் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
மாங்காய் மாம்பழம் எதுவாயினும் இதயத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.
மாங்காயை பச்சையாக நறுக்கி தண்ணீரில் ஊறப்போட்டு அதனை குடித்து வந்தால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம்.