Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இது நல்ல முயற்சியா இருக்கே…காவல்துறையினரின் சிறப்பான செயல்… பணியாளர்களுக்கான நிகழ்ச்சி…!!

காவல்துறையினர் சார்பில் முன் கள பணியாளர்களுக்கு எதிர்ப்பு சக்தி மருந்துகள் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காவல் துறையினர் சார்பில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் முன்கள பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் கோரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்கள்  போன்றோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து திருப்பூர் புஷ்பா தியேட்டர் ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு திருப்பூர் வடக்கு போலீஸ் உதவி கமிஷனர் வெற்றிவேந்தன் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் காவல்துறையினர் 50க்கும் மேற்பட்ட முன் கள பணியாளர்களுக்கு வாழைப்பழங்கள், மாம்பழம், திராட்சை பழம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளை வழங்கியுள்ளனர்.

Categories

Tech |