Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

முழு ஊரடங்கு உத்தரவு…. கடுமையாக சரிந்த பழத்தின் விலை…. பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகள்….!!

ஊரடங்கு காரணமாக தர்பூசணி மற்றும் கிர்ணிப் பழத்தின் விலை கடுமையாக சரிந்துள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை பரவல் காரணமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு அரசு கடந்த 10-ஆம் தேதி முதல் வருகின்ற 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியமற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக சாலையோர பழ வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வெயில் வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில் முழு ஊரடங்கின் காரணமாக தர்பூசணி மற்றும் கிர்ணி பழ வியாபாரிகள் விற்பனை இல்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வியாபாரிகள் பழங்களை அதிக அளவில் வாங்கி வைத்திருப்பதனால் இது தற்போது அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கரம்பயம், லால்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆதவன் கோட்டை, கந்தர்வகோட்டை போன்ற பகுதிகளிலிருந்து பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த ஊரடங்கு காரணமாக தர்பூசணி மற்றும் கிர்ணி பழங்களின் விலையும் கடுமையாக சரிந்துள்ளது. இதனால் வியாபாரிகள் வேதனையில் உள்ளனர்.

Categories

Tech |