Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

போலிசாமியின் அருள் வாக்கு… நாள் முழுவதும் புதையல் தேடி ஏமாற்றம் அடைந்த மக்கள்…!!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஊரே கூடி விளைநிலத்தில் புதையலைத் தேடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

 

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள கிராமத்தில் பொன்னம்பலம் என்பவர் விளை நிலத்தில் புதையல் இருப்பதாக தனபால் என்பவர் அருள்வாக்கு கூறியதாகவும், கோவில் கலசம், சிலைகள் இருப்பதாக அவர் கூறியதைக் கேட்டு பழி கொடுக்க சேவலை தூக்கிக்கொண்டு ஜேசிபி உடன் ஊர் மக்கள் அங்கு படையெடுத்தனர். புற்று கோவில் முன் பூசணிக்காயை வெட்டி சேவலை பலி கொடுத்து சிறப்பு பூஜைகளுடன் புதையலை தேடும் பணி நடந்தது.

Image result for புதையல் தேடிய ஊர் மக்கள்

எவ்வளவு தோண்டியும் புதையல் கிடைக்காத நிலையில் சம்பவத்தை கேள்விப்பட்ட வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உரிய அனுமதி இன்றி நிலத்தை தோன்றுவது புதையல் தேடுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் பொதுமக்களை எச்சரித்தனர். முறையாக அனுமதி பெற்று தங்கள் முன்னிலையில் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியவர்கள் கிடைக்கும் புதையல் ஊர் மக்களுக்கு சொந்தமானது என்பதற்கு உரிய ஆதாரம் இருந்தால் தங்களுக்கு கிடைக்கும் என்றும் இல்லை என்றால் அரசு கையகப்படுத்தும் என்றும் விளக்கி கூறினர். இதையடுத்து புதையல் தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

Categories

Tech |