ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான தொழிலாளி வாழ்வில் விரக்தியடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கழுகூரணி பகுதியில் குப்பு என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் இருளாண்டி(41). தொழிலாளியான இருளாண்டி ராமநாதபுரம் காட்டுப்பிள்ளையார் கோவில் பகுதியில் மனைவி மகளுடன் கூட்டுக்குடும்பமாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இருளாண்டிக்கு அதிக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.
இதனையடுத்து குடிப்பழக்கத்தால் வாழ்கை வெறுப்படைந்த அவர் நேற்று முன்தினம் மன விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்ச்சம்பவம் குறித்து அவரது மனைவி பாண்டியம்மாள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ராமநாதபுரம் பஜார் காவல்துறையினர் விசாரணை நடத்த வருகின்றனர்.