Categories
தேசிய செய்திகள்

“அடிச்சது LUCK” கூலி தொழிலாளிக்கு…. ரூ12,00,00,000 பரிசு…. கண்ணூரில் நிகழ்ந்த அதிசயம்….!!

கேரளா அரசின் புத்தாண்டு கிறிஸ்மஸ் பம்பர் லாட்டரியில்  கூலித்தொழிலாளி ஒருவருக்கு 12 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.

கேரளா மாநிலம்  கண்ணூர் மாவட்டம் வடலூரில் உள்ள தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த 58 வயதான ராஜன் என்பவர் லாட்டரி சீட்டை வாங்கி இருந்தார். கடந்த 10ஆம் தேதி பரிசுத் தொகை அறிவிப்பு வெளியிடப்பட்ட போது ராஜனுக்கு முதல் பரிசாக 12 கோடி ரூபாய் விழுந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து பரிசு விழுந்த மாதிரியே குடும்பத்தினருடன் வந்து தன் ஊரில் உள்ள மாவட்ட கூட்டுறவு வங்கியில் பணமாக மாற்றுவதற்கு டோக்கனை வழங்கினார். பணப் பிரச்சினைகளில் தவித்து வந்த அவருக்கு லாட்டரி விழுந்ததால் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார் வரி பிடித்தம் போக ஏழரை கோடியே 20 லட்சம் அவருக்கு அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |