Categories
உலக செய்திகள்

இதுதான் காரணமா..? மேலும் உயரும் எரிபொருள் விலை… வெளியான பரபரப்பு தகவல்..!!

சுவிட்சர்லாந்தில் எரிபொருள் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அக்டோபர் மாத ஆரம்பத்தில் சுவிட்சர்லாந்தில் பெட்ரோல் விலை 3 cents உயர்த்தி விற்பனை செய்யப்பட்டது. பின்னர் ஒரு லிட்டர் 1.83 பிராங்குகள் என்று வியாழக்கிழமையிலிருந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது டீசல் விலை ஒரு லிட்டர் 1.88 பிராங்குகளாக உயர்த்தி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேசமயம் புறநகர் பகுதிகளில் மலிவான விலைக்கு எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாகவும் சூரிச் பகுதியில் விலை உயர்வாக காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதாவது langgasse என்ற பகுதியில்1.24 பிராங்குகளுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் Wollishofen Zurich-ல் 1.85 பிராங்குகளுக்கு விற்கப்படுகிறது.

அதேபோல் ஒரு லிட்டர் பெட்ரோல் Staldenhof-ல் 1.77 பிராங்குகளுக்கும், luceren-ல் 1.79 பிராங்குகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையே பெட்ரோல் விலை உயர்வுக்கு ரைன் நதியில் தண்ணீர் அளவு குறைந்தது ஒரு காரணமாக கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி 40 சதவீத சரக்குகள் மட்டுமே சரக்கு கப்பல்களில் எடுத்து செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் ஒரு டன்னுக்கு சரக்கு கட்டணம் 24 பிராங்குகளிலிருந்து 54 பிராங்குகளாக உயர்ந்துள்ளதும் எரிபொருள் விலைவாசி உயர காரணம் காரணம் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |