சீய்ரா லியோன் என்ற நாட்டில் பெட்ரோல் பங்கில் தீ விபத்து ஏற்பட்டு 80க்கும் அதிகமான மக்கள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் இருக்கும் லியோனின் தலைநகரில் இருக்கும் ஒரு பெட்ரோல் பங்கின் மீது டேங்கர் லாரி ஒன்று மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது தீ பற்றி எரிந்ததில் சுமார் 91 நபர்கள் தீயில் கருகி உயிரிழந்ததாகவும், நூற்றுக்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் பங்கிற்கு அருகில் இந்த விபத்து ஏற்பட்டதில், அங்கிருக்கும் பெட்ரோல் சேமிப்பு கிடங்கு வெடித்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்நாட்டின் பிரதமர் ஜூலியஸ் மாடா பயோ தன் ட்விட்டர் பக்கத்தில், விபத்தில் பலியான குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவிகள் வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.