எனது கோரிக்கையை ஏற்று அதை நிறைவேற்றியதற்கு தமிழக அரசுக்கு மிக்க நன்றி என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வருடம்தோறும் மே மாதம் 12 ஆம் தேதி செவிலியர் தினம் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகின்றது. உலகிலுள்ள அனைத்து செவிலியர்களுக்கும் இணையத்தில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இன்று செவிலியர் தினத்தை முன்னிட்டு மருத்துவர்கள் செவிலியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். முதல்வர் ஊக்கத்தொகை அறிவித்ததை அடுத்து பலரும் இதற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவ துறையினருக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று நான் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் இன்று தமிழக அரசு அதை நிறைவேற்றி இருப்பது மகிழ்ச்சியை அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். மருத்துவர்களின் ஊதிய முரண்பாட்டை கலைந்து ஊதிய உயர்வும், காலம் சார்ந்த பதவி உயர்வும் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பிற கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.