Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இந்த ராசிக்காரர்க்கு “இன்று எதிர்ப்பு அதிகம் வரும்” இன்றைய முழு ராசி பலன் இதோ…!!

மேஷம் ராசி அன்பர்கள்..!! இன்று உங்களுடைய ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வேற்றுமதத்தவர்கள் உதவிகளை செய்வார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். இன்று சாமர்த்தியமான உங்களின் செயல்களைக் கண்டு மற்றவர்கள் ஆச்சரியம் கொள்வார்கள். முக்கிய நபர்கள் அந்தஸ்தில் உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். அதனால் கௌரவம் அதிகரிக்கும்.

புதிய தொடர்புகள் மகிழ்ச்சி கொடுப்பதாகவே அமையும். தொழில் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். இன்றைய நாள் ஒரு சிறப்பான நாளாக தான் இருக்கும்.  முடிந்தால் இன்று ஆலயம் சென்று வாருங்கள். மனம் நிம்மதியாக காணப்படும். இன்று மாணவச் செல்வங்கள் கல்வியில் நல்ல வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு இருக்கு. விளையாட்டுத் துறையிலும் ஆர்வம் மிகுந்து காணப்படும். கூடுமானவரை படிப்பில் கவனம் செலுத்துங்கள் அது போதும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர்சாதம் அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் அடர் நீல நிறம்

 

ரிஷபம் ராசி அன்பர்களே…!! இன்று குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதிய  பொருள் உங்களிடம் வந்து சேரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகள் பலிக்கும். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். குடும்பத்தில் உள்ளவர்களால் வருமானம் கிடைக்கக்கூடும்.

கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் குடும்பம் முன்னேற்றம் அடைய உதவும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். இன்று மனம் மகிழ்ச்சியாகவே காணப்படும். கொடுக்கல் வாங்கல் கூட சிறப்பாக இருக்கும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். இன்று மாணவச் செல்வங்கள் கல்வியில் கடுமையாக உழைத்து போராட வேண்டி இருக்கும். ஆசிரியரின் சொற்படி நடந்து கொள்ளுங்கள். சந்தேகம் ஏதேனும் இருந்தால் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர்சாதம் அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை  மற்றும் மஞ்சள் நிறம்

 

மிதுனம் ராசி அன்பர்கள்..!! இன்று குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் அதிகமாக இருக்கும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இன்று நீங்கள் இழக்க வேண்டி வரும்.வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பணிப்போர் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாளாகத்தான் இன்றைய நாள் இருக்கும்.. உங்கள் கீழ் பணியாற்றுபவர்கள் சிறப்பாக பணிபுரிவார்கள். அந்த விஷயத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. உங்களுடைய நிலையையும் இன்று கொஞ்சம் உயர செய்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். அதனால் கொஞ்சம் பணிச்சுமை கூடும்.

சக பணியாளர்களிடம் கொஞ்சம் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள். கூடுமானவரை இன்று வாக்குவாதங்களை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். அலுவலகம் மூலம் வாகனங்கள் உங்களுக்கு கிடைக்கலாம். என்றோ செய்த ஒரு உதவிக்கு இப்பொழுது பாராட்டு கிடைக்கக்கூடும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். இன்றைய நாள் ஓரளவு சிறப்புமிக்க நாளாக இருப்பதற்கு இறைவழிபாட்டை மேற்கொள்வது ரொம்ப நல்லது. இன்று மாணவச் செல்வங்கள் கடுமையாக உழைத்து தான் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். படித்த பாடத்தை எழுதி பார்ப்பது சிறப்பு. சந்தேகம் ஏதும் இருப்பின் ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொள்வது ரொம்ப சிறப்பு.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர்சாதம் அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை  மற்றும் மஞ்சள் நிறம்

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உண்மையாகவே இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகம் ஆவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். இன்று பணவரவு சிறப்பாக இருக்கும். உங்களுடைய செயலுக்கு தடைகள் ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகிச் செல்வார்கள். தொழில் வியாபாரம் போட்டிகள் நீங்கி நன்மைகள் நடக்கும்.

உங்களுடைய வியாபாரத்திற்கு பக்கபலமாக ஒருவரது உதவியும் கிடைக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் ஆதரவும் கிடைக்கும். இன்று சாதுரியமான பேச்சால் மேலதிகாரிகளின்  கட்டளைகளை நிறைவேற்றி பாராட்டுகளைப் பெறுவீர்கள். இன்றைய நாள் ஒரு சிறப்புமிக்க நாளாகத்தான் இருக்கும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் சிறப்பாக இருக்கும். தடைகளை உடைத்தெறிந்து முன்னேறிச் செல்லுங்கள். ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர்சாதம் அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்டமான திசை:மேற்கு 

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை  மற்றும் நீலம்  நிறம்

 

சிம்மம் ராசி அன்பர்களே…!! இன்று எடுத்த வேலையும் வேலையை எப்படியும் முடிக்காமல் ஓய மாட்டீர்கள். தாயாருடன் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வந்து செல்லும்.  பழைய கடனைத் தீர்க்க புது வழியை யோசிப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் முன்னேறிச் செல்வீர்கள். இ ன்று சாதுரியமான பேச்சால் ஆதாயம் ஏற்படும் பணவரவு நல்லபடியாக இருக்கும்.

இன்று காரியத்தில் இருந்த தடைகள் நீங்கும் செல்வம் சேரும் செல்வாக்கு உயரும். வாழ்க்கைத்தரம் உயர எடுக்க முயற்சி எடுக்கும் முயற்சிகள் கை கொடுக்கும் நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாகவேஇருங்கள் . இன்றைய நான் ஒரு உன்னதமான நாளாகவே இருக்கும். முடிந்தால் நிச்சயம் மட்டும் சென்று வாருங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி முன்னேற்றமான சூழல் இருக்கும். உயர்கல்விக்கான முயற்சிகள் வெற்றி வாய்ப்பு ஏற்படும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர்சாதம் அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 3மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்

 

கன்னி ராசி அன்பர்கள்…!! இன்று உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம்.பிள்ளைகளால் மருத்துவச் செலவு ஏற்படும்.பழைய கடனைத் தீர்க்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும் உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். இன்று வாழ்க்கைத் துணை உங்களுக்கு ஆதரவாக இருக்கக் கூடும் பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும் தடைபட்டு வந்த திருமணம் காரியங்கள் சாதகமாக நடக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க கூடும்.

குடும்பத்தில் வீண் விவாதங்கள் வந்து செல்லும் கொஞ்சம் கவனமாக இருங்கள். பேசும் போது நிதானத்தை கடைபிடியுங்கள் வாக்குவாதமும் செய்யாதீர்கள். உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும் இருந்தாலும் சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்வது நல்லது. அதுபோலவே சரியான நேரத்திற்கு தூங்க செல்வது ரொம்ப நல்லது. இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் மிகப்பெரிய வெற்றி வாய்ப்புகள் ஏற்படும் நினைத்தது நடக்கும் ஆசிரியரின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பழுப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பழுப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர்சாதம் அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 4மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு மற்றும் வெளிர்  நீலம்  நிறம்

துலாம் ராசி அன்பர்களே, இன்று கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் முழுமையாக நீங்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டாகும். உத்யோகத்தில் திருப்தியான சூழல் இன்று இருக்கும். உற்சாகமான நாளாக இருக்கும்.

இன்று அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை  செய்து வெற்றி பெறுவீர்கள். புதிய நட்பு மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளவீர்கள். தடை பட்டு வந்த காரியம் தடை நீங்கும். சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் கிடைக்கும்.

இன்று நீங்கள் செய்யும் செயல் அனைத்துமே வெற்றியை கொடுப்பதாக இருக்கும். புதிய வாய்ப்புகள் வந்து சேரும். கல்யாணக் கனவுகள் நனவாகும். அதுமட்டுமில்லாமல் காதல் கைகூடும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி முன்னேற்றமான சூழல் இருக்கும். ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பும் இருக்கும்.

இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவிலே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக  கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் சிவப்பு

 

விருச்சிகம் ராசி அன்பர்களே, சிலரின் தவறை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தர்மசங்கடமான சூழ்நிலைகல் இன்று கவனிக்க வேண்டியிருக்கும். திடீர் கோபங்கள் உண்டாகும்.

நிதானமாக இருப்பது ரொம்ப நல்லது. புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப்போடாமல் உடனே முடிவு காண்பது, ரொம்ப நல்லது. தெளிவான சிந்தனை தோன்றும். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து ஈடுபட்டு முடிவு காண்பீர்கள்.

வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள், பஞ்சாயத்துகளில் ஏதும் தலையிட வேண்டாம். யாருக்கும் எந்தவித ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். மற்றவர்களுக்கு பணம் வாங்கித் தருகிறேன் என்று எந்தவித பொறுப்புகளையும் இன்று ஏற்க வேண்டாம். இன்று மாணவச் செல்வங்களுக்கு கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களை படிக்க வேண்டும். படித்த பாடத்தை தயவுசெய்து எழுதிப் பாருங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர்சாதம் அன்ன  தானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் நீல நிறம்

 

தனுசு ராசி அன்பர்களே, உங்களின் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வேற்று  மதத்தவர் அறிமுகம் ஆவார்கள். புதிய முயற்சிகள் பலிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.

தன்னம்பிக்கை துளிர்விடும் நாள் தான் இன்றைய நாள் இருக்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் நன்மை, தீமை பற்றிய கவலை படாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட  செய்வார்கள். போட்டிகள் மறையும்.  எதிர்ப்புகள் விலகி செல்லும்.

திருமண தொடர்பான காரியங்களில் சாதகமான பலனே இன்று கொடுக்கும். இன்று எந்த ஒரு விஷயத்தையும் திறம்பட செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் இன்று அறியப்படும். உங்களது வார்த்தைக்கு மதிப்புக் கூடும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

இன்று வாகனத்தில் செல்லும்போது மட்டும் நிதானமாக செல்லுங்கள். இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும்.

அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தேசங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஆரஞ்சு

மகரம் ராசி அன்பர்களே,  இன்று நீண்ட நாள் ஆசை நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். வீடு வாகன பராமரிப்புச் செலவுகள் குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கி நிற்கும். இன்று  கடன் தொடர்பான பிரச்சினைகள் தீரும்.
பணவரவு சிறப்பாக இருக்கும். மன குழப்பம் நீங்கி உடல் ஆரோக்கியம் சீராக  இருக்கும். இன்று  திறமையாக செயல்பட்டு பாராட்டுக்களைப் பெறுவீர்கள். சின்ன விஷயத்துக்கு கூட கோபம் கொஞ்சம் வரும், நிதானமாக இருப்பது நல்லது. வேற்று மொழி பேசும் நபரால் நன்மை ஏற்படும். புதிய நபர்களால் உங்களுக்கு லாபம் கூடும்.
இன்று  மாணவர்கள் கல்விக்காக கொஞ்சம் போராடித்தான் வெற்றியை பெற கூடும்.  கடினமாக உழைத்து  பாடங்களைப் படியுங்கள், தயவுசெய்து படித்த பாடங்களை எழுதிப் பாருங்கள்.இன்று  முக்கியமான பணியை  மேற்கொள்ளும்போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும்.
அது மட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை:மேற்கு
 அதிர்ஷ்ட எண்-3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்

 

கும்பம் ராசி அன்பர்களே, இன்று எதிர்பாராத பணவரவு ஏற்படும். உறவினர்கள் நண்பர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். இன்று புத்தி சாதுரியத்தால் உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்ளவீர்கள். புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள்.
வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும்.  நீங்கள் நினைப்பது படி மற்றவர்கள் நடந்து கொள்ளாததால், கோபம் கொஞ்சம் தலைதூக்கும். இன்று  உங்களை இடையூறு செய்தவர்கள் விலகிச்செல்வார்கள். தொழில் தொடர்பான பயணங்கள் இன்று இருக்கும். அந்தப் பயணம் ஆலோசனை கொடுக்கக்கூடியதாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை அதிகரிக்கும். அலைச்சலும் அதனால் சோர்வும் இருக்கும், பார்த்துக்கொள்ளுங்கள். நிதானமாக இருங்கள், மற்றவர்களிடம் பேசும் பொழுது நிதானமாகப் பேசுங்கள். மாணவர்கள் இன்று கல்விக்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். விளையாட்டை ஓரங்கட்டிவிட்டு கல்வியில் கவனத்தை செலுத்துவது ரொம்ப சிறப்பு.
இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலேயே இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு  நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்ன தானமாக கொடுங்கள். உங்கள் வாழ்வில் வறுமை நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
 அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7 நிறம்
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்

மீனம் ராசி அன்பர்களே,  இன்று குடும்பத்தில் கலகலப்பான சூழலை உருவாக்கிக் கொள்வீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். கேட்ட இடத்தில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.

மனசாட்சி படி செயல்படும் நாளாக  இன்றைய நாள் இருக்கும். இன்று  குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை மாறும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் வருமானம் உயருவதற்கான  சூழ்நிலை எப்படியாவது காப்பாற்றி விடுவீர்கள். ஒருசில பணி காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க கூடியதாக  நேரலாம்.

கணவன், மனைவியிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். மன மகிழ்ச்சி கூடும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவது மூலம் விருந்தினர் வருகையாலும் செலவுகள் கொஞ்சம் இருக்கும், தயவுசெய்து தேவையில்லாத பொருட்களை மட்டும் வாங்க வேண்டாம்.

அது மட்டும் இல்லாமல் திடீரென்று கோபம் கொஞ்சம் தலைதூக்கும். யாரிடமும் வாக்குவாதங்கள் இல்லாமல் பேசுங்கள். அது போதும் இன்று தயவுசெய்து மற்றவர்களுக்கு பண கடன் மட்டும் கொடுக்காதீர்கள். இந்த விஷயத்தில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

இன்று  மாணவச் செல்வங்களுக்கு கொஞ்சம் கடுமையாக உழையுங்கள். பாடத்தில்மட்டும் கவனத்தை செலுத்துங்கள், விளையாட்டை தயவு செய்து எரங்கட்டி விடுங்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவிலேயே இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்

 

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |