Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இன்று மாலை 5 மணி முதல்….. “முழு ஊரடங்கு” அதிரடி அறிவிப்பு….!!

கோவையில் இன்று மாலை 5 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் தற்போது வரை ஆறாவது கட்ட நிலையில் தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருக்கிறது. இருப்பினும் பாதிப்பு குறைந்த பாடில்லை. முதல் ஐந்து கட்ட ஊரடங்கில் பல விதி முறைகள் விதிக்கப்பட்டு பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே வெளியே வந்தனர். தற்போது 6 ஆவது கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு பொது மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர்.

பல கட்டுப்பாடுகள் இன்னும் நிலுவையில் இருக்கிறது. இது ஒருபுறமிருக்க, வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நாளை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் மருந்து, பால், மருத்துவ பயணம் உள்ளிட்ட அத்தியாவசியப் காரணங்களை தாண்டி வேற எந்த காரணத்திற்காகவும் பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ள சூழ்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் மட்டும் இன்று மாலை 5 மணி முதல் திங்கள் கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் வழக்கம்போல் இயங்கும் தேவையின்றி மக்கள் வெளியே வந்தால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |