Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முழு ஊரடங்கு வருமா? மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை தொடங்கியது..!!

சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்த வருகிறார்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்று, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதிகமாகும் தொற்று, அடுத்தகட்ட நடவடிக்கை ஆகியவை குறித்து 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து அமைச்சரவைக் கூட்டமும் நடக்கிறது.ஐசிஎம்ஆர் துணை இயக்குனர் பிரதீப் கவுர் தலைமையில் 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது.

ஒவ்வொரு ஊரடங்கு நிறைவுபெறும்போதும் இந்தக் குழு முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அடுத்து மேற்கொள்ள வேண்டிய நிலை குறித்த ஆய்வறிக்கையை அளிப்பது வழக்கம். அதன்படி தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தற்போது ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி முடிவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் பாதிப்பு அதிக அளவில் உள்ளதும், உயிரிழப்பு அதிகரிப்பதும் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து மற்ற மாவட்டங்களுக்குத் தொற்று பரவாமல் இருக்க சென்னையைத் தனிமைப்படுத்த வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

இந்நிலையில் தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தற்போது நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். அதேபோன்று நிபுணர்குழு கூட்டம் முடிந்தவுடன் அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது.

Categories

Tech |