பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியல் மண்டல வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2058-ஆக அதிகரித்துள்ளது. சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 673 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 103 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதாவது தமிழகத்தின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் சென்னையின் பாதிப்பு விகிதம் 32.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. தற்போது சென்னை மருத்துவமனைகளில் 455 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மண்டலவாரியாக பாதிக்கப்பட்டவர்களின் முழு விவரம்:
ராயபுரம் 164,
திரு.வி.க நகரில் 128,
தேனாம்பேட்டை 81,
தண்டையார் பேட்டை -70,
கோடம்பாக்கம் மணடலத்தில் 60,
அண்ணா நகர் 65,
வளசரவாக்கம்-26,
அடையாறு-19,
திருவொற்றியூர்-15,
ஆலந்தூர் -9,
பெருங்குடி 9,
மாதவரம் 4,
சோழிங்கநல்லூர் -2,
மணலி – 1.