மேஷம் ராசி அன்பர்களே…!! இன்று உங்களுடைய மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும் .பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பர செலவுகளை மட்டும் குறைத்துக் கொள்ளுங்கள். சேமிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள் .உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவிகளை செய்வார்கள். இன்று புதுமை படைக்கும் நாளாகத்தான் இருக்கும் .
இன்று துணிச்சலாக ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வாகனத்தில் செல்லும்போதும் பயணங்களின் போதும் ரொம்ப கவனமாக இருங்கள். மாணவர்களுக்கு திறமையால் முன்னேற்றம் ஏற்படும் கஷ்டமான பாடங்களையும் துணிச்சலாக படித்த முடிப்பீர்கள். இன்று எதிர்பாராத வகையில் உங்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கிடைக்கும். அது போலவே இன்றும் பால்ய நண்பர்களை சந்திக்க கூடிய வாய்ப்பும் இருக்கும் .
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும் .
அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்டமான எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்டமான நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்
ரிஷபம் ராசி அன்பர்களே !! இன்று பெருந்தன்மையுடன் அனைத்து விஷயத்திலும் நடந்துகொள்வீர்கள். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். சபையில் உங்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள் வீட்டை புதுப்பிப்பதற்கான திட்டங்களை மேற்கொள்வீர்கள் வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள்.
உத்தியோகத்தில் உங்களுடைய நிர்வாகத் திறமை பளிச்சிடும். உங்களுடைய வர்த்தக திறமையும் இன்று அதிகரிக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையால் முன்னேற்றம் அடைவார்கள். இழுபறியாக இருந்த வேலையை துணிச்சலாகவே செய்து முடிப்பீர்கள். இன்றைய நான் சுவாரஸ்யமான நாளாகவே இருக்கும். திருமண முயற்சிகள், காதல் கைகூட கூடிய சூழலும் இருக்கும்.
இன்று மாணவர்களுக்கு கொஞ்சம் கடுமையான நாளாக இருக்கும் விளையாட்டுத் துறையில் ஆர்வம் செல்லும் விளையாடும் பொழுது நீங்கள் கவனமாக விளையாட வேண்டும் இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு எப்போதும் நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் எந்த காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் இளம் பச்சை
மிதுனம் ராசி அன்பர்களே !! இன்று குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். கல்யாணப் பேச்சு வார்த்தை நன்மையை கொடுக்கும்.புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரியை ஆதரிக்கக் கூடும்.
இன்று மதியத்திற்கு மேல் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். எதிர்பார்த்த தகவல் நல்ல தகவல் வந்து சேரும் .கணவன் மனைவி இருவரும் எந்த ஒரு முடிவையும் நிதானமாக யோசித்து எடுப்பது நன்மையை கொடுக்கும். அவசரத்தை மட்டும் தவிர்த்து விடுங்கள். தயவுசெய்து அலட்சியத்தை இன்று கடை பிடிக்காதீர்கள். அலச்சியமில்லாமல் காரியத்தை மேற்கொள்ளுங்கள் சிறப்பாக இருக்கும். சகோதர வழியில் உதவியுமின்றி நீங்கள் எதிர்பார்க்க கூடும்
இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். விளையாட்டுத் துறையில் ஆர்வம் இன்று சொல்லும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவிலேயே இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை ; வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் சிறப்பாக செய்வீர்கள் பழைய நினைவுகளில் மூழ்கி இருப்பீர்கள். தரப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும் நெருக்கடியான
நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். இன்று எந்த ஒரு விஷயத்தையும் கொஞ்சம் கடுமையாக உழைத்ததால் செய்யவேண்டியிருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தையும் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று மக்களிடம் உங்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும் இன்று முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள் ரொம்ப சிறப்பாகவே இருக்கும் என
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஸ்ட்டட்த்தை கொடுக்கக் கூடிய அளவிலே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப நல்ல படியாகவே நடக்கும்
அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்
சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறி செல்வீர்கள் வீடு வாகன பராமரிப்புச் செலவுகள் இன்று அதிகரிக்கம். உங்களுடைய மகளுக்கு நல்ல வரன் அமையும் வெளி வட்டாரத்தில் புது அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கூடும்.
இன்று உழைப்பால் வுயரும் நாளாக இன்று இருக்கும் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். திடீரென இடம் மாற்றம் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகமே கிடைக்கும். வீண் செலவுகள் கௌரவ குறைச்சல் போன்றவை ஏற்படக்கூடும். கூடுமான வரை மற்றவர்களிடம் பேசும் போது ரொம்ப கவனமாக பேசுங்கள். தாய் தந்தையின் உடல் நிலையில் கொஞ்சம் கவனமாகவே இருங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவில் தான் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள்.அனைத்து காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்
கன்னி ராசி அன்பர்களே..!! இன்று கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் மரியாதை கூடும். பிரபலங்கள் உதவிகளை செய்வார்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.
இன்று எதிர்ப்புகள் விலகி செல்லும் பிரச்சனைகளில் சுமூகமான முடிவு கிடைக்கும். தைரியம் கொடுங்க தொழிலை மூலதனமாக வைத்து வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வருவீர்கள். வாக்கு வன்மையால் எதையும் சாதகமாகவே செய்து முடிப்பீர்கள். உங்களுடைய திறமை இன்று அதிகரிக்கும் நாளாகவே இருக்கும். உங்களுடைய வசீகரமான பேச்சு அனைவரையும் கவரும் விதமாகவும் இருக்கும்.
என்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது. ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் .ஆரஞ்சு நிறமும் ஓரளவு சிறப்பை கொடுப்பதாகவே அமையும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்
துலாம் ராசி அன்பர்களே…!! இன்று எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பழைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களைத் தேடி வந்து பேசுவார்கள். பயணங்கள் சிறப்பான பயணமாக அமையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள்.
உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். மதிப்புக் கூடும் நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று திட்டமிட்டபடி செயலாற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான பேச்சினால் எதிலும் லாபம் காண்பார்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரியபகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்
விருச்சிக ராசி அன்பர்களே…!! இன்று எதையும் சமாளிக்கும் திறமை உங்களுக்கு பன்மடங்கு இருக்கும். உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொண்டு அதற்கு ஏற்றாற்போல் செயல்படுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களை பாராட்டுவார்கள். இனிமையான நாளாக இன்றைய நாள் இருக்கும்.
இன்று குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கனிவுடன் பேசுவது நல்லது. விருந்தினர் வருகை இருக்கும். குடும்பப் பிரச்சினைகள் சாதகமான முடிவாகவே இருக்கும். இன்று குழப்பங்கள் தீரும் நாளாக இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்
தனுசு ராசி அன்பர்கள்…!! இன்று குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது மிகவும் நல்லது. யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். இன்று எதிலும் நீங்கள் எச்சரிக்கையாக தான் செயல்பட வேண்டும். இன்று குழப்பங்கள் ஓரளவு தான் தெளிவு பிறக்கும். கூடுமானவரை பணக்கஷ்டம் இன்று குறையும். எந்த ஒரு விஷயத்தையும் இன்று நீங்கள் பக்குவமாக தான் எடுத்து சொல்ல வேண்டியிருக்கும். எதிரில் இருப்பவர்களை திருப்தியடைய செய்வீர்கள்.
பல வழிகளிலும் ஏற்பட்ட தொல்லைகள் உங்களுக்கு இன்று ஓரளவு இருக்காது. ஆனால் எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் எச்சரிக்கையுடன் தான் இன்று மேற்கொள்ள வேண்டும். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். ஆலயம் சென்று வந்து மனதை கொஞ்சம் நிம்மதியாக வைத்துக் கொள்ளுங்கள் அப்பொழுதுதான் காரியத்தை நீங்கள் எளிதாக செய்து முடிக்க முடியும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து காரியம் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்
மகரம் ராசி அன்பர்கள்…!! இன்று எந்த ஒரு விஷயம் செய்வதாக இருந்தாலும் கொஞ்சம் கடினப்பட்டு தான் செய்ய வேண்டி இருக்கும். எதிர்பார்த்தது தாமதமாகத்தான் வந்து சேரும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். உங்களது அணுகுமுறையை தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக தான் இருக்கும். உத்தியோகத்தில் ஓரளவுதான் வேலைச்சுமை குறையும்.
உங்களுக்கு மாலையில் இருந்து கொஞ்சம் தடைகள் வர ஆரம்பிக்கும். அதை நீங்கள் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. யாரிடமும் எந்தவித வாக்குவாதங்களும் இல்லாமல் இருப்பது மிகவும் நல்லது. கூடுமானவரை இன்று நீங்கள் பேச்சை குறைத்துக் கொள்வது சிறப்பானதாக தான் அமையும். இன்று புதிய முயற்சிகளில் ஓரளவு தாமதமான நிலைதான் காணப்படும். தொழில் வியாபாரத்திலும் மெத்தனமான போக்கே காணப்படும். இன்று எந்த ஒரு விஷயத்தையும் கொஞ்சம் கவனமாக மேற்கொண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சல், காரியங்களில் இழுபறி போன்றவை சமாளிக்க கூடும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாகவே இருக்கும் அதுமட்டுமில்லாமல் சூரியபகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் நீல நிறம்
கும்பம் ராசி அன்பர்கள்…!! இன்று எதிர்மறையாக பேசுபவர்களிடம் இருந்து விலகிச் செல்வீ ர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும் விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். உடல் நலம் சீராகும் அழகு மற்றும் இளமை இன்று கூடும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்கும் சூழல் இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிட்டும். புதிய பாதை தெரியும் நாளாக இன்றைய நாள் இருக்கும்.
இன்று உங்களுக்கு தொல்லை கொடுத்தவர்கள் விலகிச்செல்வார்கள். வீண் செலவு மட்டும் கொஞ்சம் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியம் ரொம்ப சிறப்பாகவே இருக்கும் என்பதால் இன்று உற்சாகமாகவும் நீங்கள் காணப்படுவீர்கள். உங்கள் திருமணத்திற்கு தடையாக இருந்தவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்லக் கூடும். சிறப்பான நாளாக தான் இன்று இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்
மீனம் ராசி அன்பர்களே…!! இன்று உங்கள் யதார்த்த பேச்சு அனைவரையும் கவரும் விதமாக இருக்கும். துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கக்கூடும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். தைரியம் கூடும் நாளாக இன்றைய நாள் இருக்கும்.
இன்று பேச்சைக் குறைத்து செயலில் ஈடுபடுவது நன்மையை கொடுக்கும். குடும்பத்தில் சுமுகமான நிலை காணப்படும். ஆனாலும் மனதில் குடும்பம் தொடர்பான கவலைகள், பிள்ளைகள் பற்றிய கவலைகள் இருந்து கொண்டே இருக்கும். தயவுசெய்து தேவை இல்லாத விஷயத்திற்காக மன குழப்பம் அடைய வேண்டாம். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது சிறப்பு. இன்றைய நாள் ஓரளவு சிறப்பாக நாளாகவே இருக்கும். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள் மனநிம்மதியாக காணப்படும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்துகொண்டு செல்லுங்கள். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியங்கள் சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் நீல நிறம்