Categories
உலக செய்திகள்

சர்வதேச யோகா தினம்…. கோரிக்கை விடுத்த இந்திய பிரதமர்…. பிரபல நாடுகளில் நடந்த சிறப்பு நிகழ்ச்சி….!!

இந்தியத் தூதரகத்தின் சார்பாக அபுதாபியில் சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

இந்தியாவின் பிரதமரான நரேந்திர மோடி ஐக்கிய நாடுகள் சபைக்கு விடுத்த கோரிக்கையின் பேரில் கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்திய தூதரகத்தின் சார்பாக அபுதாபியில் சர்வதேச யோகா தினத்திற்கு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதற்கு இந்தியாவின் தூதரான பவன் கபூர் தலைமை தாங்கியுள்ளார்.

மேலும் இதில் இந்திய தூதரகத்தின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டு யோகாசனத்தை செய்துள்ளார்கள். இதேபோல் துபாய் நாட்டிலும் இந்திய தூதரகத்தின் சார்பாக சர்வதேச யோகா தினத்திற்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் இந்திய தூதரகத்தின் துணை தூதர் பதவியை வகிக்கும் அமன் புரி என்பவர் தலைமை தாங்கியுள்ளார்.

Categories

Tech |