ரேஷன் கடைகளில் நாளை முதல் தமிழக அரசு வழங்கும் நிவாரணம் வழங்கப்பட இருப்பது வழங்கப்பட உள்ளன
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழகத்தில் மாநில அரசு வழங்கி வரும் 1000 ரூபாய் ஊக்கத் தொகையுடன் ஏப்ரல் மாதத்திற்கான ரேஷன் பொருட்களும் இலவசமாக வழங்கப்படுகின்றன. இரண்டு கோடிக்கும் மேல் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை நாளை முதல் வழங்கப்பட உள்ளது.
வீடுவீடாக டோக்கன் கொடுக்கப்பட்டு குடும்ப அட்டைதாரர்கள் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட நாளில் ரேஷன் கடைக்கு சென்று நிவாரணத்தை பெற்றுச் செல்லலாம் என்று உணவுப் பொருள் வழங்கும் துறை அறிவுறுத்தியுள்ளது. இத்திட்டத்தை கூடுதல் நேரமெடுத்து செயல்படுத்துவதற்காக நியாய விலை கடையின் ஊழியர்களுக்கு ரூபாய் 5000 வரை அரசு ஊக்கத்தொகை அளிப்பதாக அறிவித்துள்ளது.